சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாய சட்டங்களுக்கு தடை... விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி... ஸ்டாலின் வரவேற்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு தேசம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Stalin says, Supreme Court stays implementation of three Farm Laws is victory for farmers

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

''தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன்.''

''இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!''

''அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.'' என்று கூறியிருக்கிறார்.

சமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்.. அஸ்ஸாம் மேஜிக் ரைஸ் இப்போது தெலுங்கானாவிலும்.. விவசாயியின் புதுமைசமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்.. அஸ்ஸாம் மேஜிக் ரைஸ் இப்போது தெலுங்கானாவிலும்.. விவசாயியின் புதுமை

இதனிடையே விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தியிருந்தார் ஸ்டாலின்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை காட்டிலும் தமிழகத்தில் திமுக இந்த புதிய வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Stalin says, Supreme Court stays implementation of three Farm Laws is victory for farmers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X