“கூட்டணி, சீட் பங்கீட்டை நான் பார்த்துக்கிறேன்.. ஒற்றுமையா இருங்க” - ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கூட்டணி, தொகுதிப் பங்கீடு, எந்தத் தொகுதி யாருக்கு, வேட்பாளர் யார், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். அதை என்னிடம் விட்டுவிடுங்கள். எங்கு - யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை பாருங்கள்! ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது. அதனால், தோழமைக் கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும்." என முதல்வர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி - சென்னை, விழுப்புரம் மண்டல மாநாடு" இன்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 49 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Stalin to Cadres Focus on Work I ll Handle Alliances and Seats

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாம் ஆட்சிக்கு வர வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று சொல்கிறோம். அதேபோன்று, ஆட்சிக்கு யார் வரக் கூடாது என்பதையும் மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலில் தி.மு.க.வை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சர்வநிச்சயமாக டெல்லி பா.ஜ.க ஆட்சியாகத்தான் இருக்கும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிய வையுங்கள்!

நம்முடைய கூட்டணியைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும், இதுவரை நாம் செய்து கொண்டு வரும் நலத் திட்டங்கள் நின்றுவிடும்! தமிழ்நாட்டின் தொகுதி அளவையே குறைத்துவிடுவார்கள். இதுவரை நாம் சாதித்துக் காட்டியிருக்கும் வளர்ச்சியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். வளர்ச்சி அரசியல் மாறி, கலவர அரசியல்தான் தமிழ்நாட்டில் நடக்கும்!

நடக்க இருக்கும் தேர்தல், 2 கூட்டணிகளுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல! இது, தமிழ்நாடு வெர்சஸ் NDA! பாமர மக்களுக்கும் புரிவது மாதிரி இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், வெல்லப் போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல்! அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் தி.மு.க.வை ஆதரித்தாக வேண்டிய செயல் தேவையை விளக்க வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு - திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட், பேரிடர் நிவாரணம், கல்வி நிதி என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்குச் செய்யும் வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்வி எழுப்பாத அடிமை அ.தி.மு.க.வின் துரோகத்தையும் மக்கள் முன் தோலுரிக்க வேண்டும்.

வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று துடிக்கும் விஷ விதைகளைத் தமிழ்நாட்டிற்குள் விடவே கூடாது!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, தி.மு.க.வின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன், தமிழ்நாட்டின் திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது! இந்த உறுதியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்ல வேண்டியது உங்களின் வேலை! களப்பணி மட்டும்தான், இனி உங்களின் முழுப் பணி. உங்களின் ஒவ்வொரு நிமிட உழைப்பும், ஒரு வாக்கு!

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, எந்தத் தொகுதி யாருக்கு, வேட்பாளர் யார், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். அதை என்னிடம் விட்டுவிடுங்கள். எங்கு - யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் தலைவர்தான் - இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை பாருங்கள்!

ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது. அதனால், தோழமைக் கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும். இதைச் செய்தாலே, 2024 போன்று முழு வெற்றி நம்முடைய வசமாகிவிடும்!

இங்கும் இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்... நாம் தேர்தல் வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டோம்... என்னை தினமும் நீங்கள் செய்திகளில் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்... தினமும் எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை கூட்டங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை ஆய்வுகள் - ஓய்வே இல்லாமல் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த இயக்கத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொள்ளும்போது, "என் சக்தியையும் மீறி நான் உழைப்பேன்" என்று சொன்னேன்.

சொன்னபடியே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்! நான் மட்டுமா உழைக்கிறேன்... இங்கு மேடையில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களானாலும் சரி, நிர்வாகிகளானாலும் சரி, பூத் அளவில் இருக்கும் நீங்களும் சரி, ஓய்வில்லாமல்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்! இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் இவ்வாறு வேலை செய்யாது. இவ்வாறு நாம் உழைக்கும் காரணத்தினால்தான், தமிழ்நாடும் நம்பர் ஒன்-ஆக இருக்கிறது! திராவிட முன்னேற்றக் கழகமும் நம்பர் ஒன்-ஆக இருக்கிறது!" எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+