தனியார் ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து.. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட மண்டலங்களை ரத்து செய்து, அவற்றை மற்ற நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "52,000 இடங்கள் ரத்தானது பணம் செலுத்திய ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே இது குறித்து சவுதி அரசிடம் ஒன்றிய அரசு பேச வேண்டும்" என கோரியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் எழுதப்பட்டிருப்பதாவது, "ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்று. தங்களது வாழ்நாள் சேமிப்புகளை கொண்டு ஒருமுறையாவது அவர்ள் ஹஜ் பயணம் மெற்கொள்ள விரும்புகிறார்கள். அப்படியெனில் இந்த பயணம் எந்த அளவுக்கு புனித தன்மை கொண்டது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு ஹஜ் பயணம் ஜூன் 4, 2025 முதல் ஜூன் 9, 2025 வரை நடைபெறவுள்ளது. பயணிகள் மே மாதத்திலேயே சவுதி அரேபியாவுக்கு செல்லத் தொடங்குவார்கள்.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு 1,75,025 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியா-சவுதி இடையே கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 70% இடங்கள் அதாவது 1,22,517 இடங்கள் மாநில ஹஜ் கமிட்டிக்கும், 30% இடங்கள் அதாவது 50,507 இடங்கள் தனியார் ஹஜ் சுற்றுலா நிறுவனங்களுக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்த தனியார் ஒதுக்கீடு திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இதற்காக ஏற்கெனவே பணம் செலுத்தியவர்கள் கடும் நெருக்கடியில் இருக்கியிருக்கிறார்கள். ஆகவே இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, சவுதி அரசிடம் பேச வேண்டும். இந்தியாவுக்கு மீண்டும் பழைய எண்ணிக்கையல் ஹஜ் பயண இடங்கள் வழங்கப்பட வேண்டும். இதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications