அரசுப் பள்ளியில் உயர் அதிகாரிகளின் குழந்தைகளை சேர்க்க சொல்லுங்கள்.. அன்பிலுக்கு போன் போட்ட கமல்ஹாசன்
சென்னை: அரசுப் பள்ளியில் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் குழந்தைகளை சேர்க்க சொல்லுங்கள் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தொலைப்பேசி மூலமாக அமைச்சர் அன்பில் மகேஷிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழக அரசு சார்பாக மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாகப் பள்ளிக் கல்விக்கான கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெற்று கொண்டார். நடப்பாண்டிலேயே மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறி இருந்தோம். அதனால் எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறி வருகிறார். அதற்காக நாங்கள் 220 தொகுதிகள் என்று சொல்ல வேண்டுமா? மக்களின் முடிவே இறுதியானது.

மக்களின் முடிவுக்குத் தலைவணங்குவோம். திமுக கூட்டணி பிரிய வேண்டும் என்பது அதிமுகவின் ஆசை. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை நாங்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். அனைவரையும் முதல்வர் ஸ்டாலின் அரவணைத்து செல்கிறார். ஒவ்வொரு கட்சித் தலைவரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள். நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்கள்.
நேற்று மாநில கல்விக் கொள்கை வெளியிட்ட பின் முதல்வர் ஸ்டாலின் என்னிடம் ஒரு விஷயத்தை அறிவுறுத்தினார். அது என்னவென்றால், அனைத்து கூட்டணி தலைவர்களுக்கும் மாநில கல்விக் கொள்கையில் என்ன செய்திருக்கிறோம் என்பதை நீயே சொல்ல வேண்டும். அனைவரின் கைகளுக்கு மாநில கல்விக் கொள்கை கையேடு சென்று சேர்ந்திருக்க வேண்டும்.
கல்வியாளர்கள் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தினார். அதனால் 10 ஆண்டுகளாக நாங்கள் ஒரு குடும்பத்தை போல் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை 2 கட்ட ஆலோசனை முடிந்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு முடிவை எடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
பின்னர் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கும் நிலைமை இருக்கா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்பில் மகேஷ் பேசுகையில், இது ஜனநாயக நாடு.. யார் வேண்டுமானாலும் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம். எங்களைப் பொறுத்தவரைக் கல்வி கட்டமைப்புக்குள் அனைவரும் வர வேண்டும்.
உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் குழந்தைகள் அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் அளவிற்குக் கட்டமைப்பை உருவாக்குவது சவாலான ஒன்றுதான். அதனை செய்ய வேண்டும். அவர்களாகவே அரசுப் பள்ளியைத் தேடி வர வேண்டும். நான் யாரையும் உத்தரவிட்டோ, கட்டாயப்படுத்தியோ அப்படி செய்ய வைக்கக் கூடாது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல.. அது பெருமையின் அடையாளம்.
நேற்றைய நிகழ்ச்சி கூட அறிவுத் திருவிழாவாக அமைந்தது. கிட்டத்தட்ட திமுக ஆட்சியில் 1,800 மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், சட்டப் பல்கலைக்கழகம், வெளிநாட்டு மாணவர்கள், தைவான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த 3 மாணவர்களில் இருவர் அரசுப் பள்ளி மாணவர்கள். இதே கருத்தை மநீம தலைவர் கமல்ஹாசன் தொலைப்பேசி மூலமாக இதே கருத்தைத் தான் கூறி இருந்தார்.
அரசுப் பள்ளியில் பணக்கார வீட்டுக் குழந்தைகள் சேரும் போது 2 மடங்கு கட்டணம் கொடுக்க சொல்லுங்கள் என்று பெருமையுடன் கூறினார். அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என்பதைக் கூட ஆலோசிக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications