நீட் தேர்வு இருக்கக் கூடாது! மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் அதிரடி! ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
சென்னை: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கைகளை வடிவமைக்க கருத்துகள் கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழுவினர் தற்போது அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. இவை எல்லாம் பொதுமக்கள், மாணவர்கள், கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு மாநிலக் கொள்கை உருவாக்கப்பட்டது.
தமிழில் 600 பக்கங்களும் ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும் கொண்ட அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் சிறப்பம்சங்கள்:
நீட் தேர்வு இருக்கக் கூடாது
இரு மொழி கொள்கையே தொடர வேண்டும்
கல்லூரிகளில் சேர 12 ஆம் வகுப்பு மட்டுமின்றி 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்
3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications