ஆத்தாடி இத்தனை சிலைகளா? ஸ்டாலின் ஆட்சியில் சிலைகளின் ராஜ்ஜியம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில்தான் அதிக அளவிலான சிலைகள் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மெரினாவில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்குப் பேனா சின்னம் வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது கடும் எதிர்ப்புக் கிளப்பியது.

அதற்காகக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், பொங்கி எழுந்து பேசினார். அதைக் கேட்ட உடன்பிறப்புகள் கொத்திப் போய் அவரைப் பேசவிடாமல் மடக்கப் பார்த்தனர்.
அடுத்து திமுக ஆட்சியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது சேலம் மாடர்ன் தியேட்டர் முன்பு மு.கருணாநிதிக்குச் சிலை வைக்க இருந்த சம்பவம். அரசுக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என திமுக அமைச்சர்கள் சில மறுப்பு தெரிவித்தும், அந்தச் செய்தி அரசியலாக்கப்பட்டது.
உண்மையில் சொல்லப்போனால், இந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் சைலண்ட் ஆகப் பலருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் கடந்த கால ஆட்சிகளைவிட அதிக சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்றே தெரிகிறது.

தமிழ்நாட்டில் சிலை வைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் பென்னிகுயிக் பிறந்த லண்டன் மண்ணில், தமிழ்நாடு அரசு சார்பாக சிலை நிறுவினார் முதல்வர் ஸ்டாலின். ஒரு அயல் நாட்டுக்காரருக்குத் தமிழக அரசு சார்பில் வெளிநாட்டிலேயே சிலை நிறுவும் முயற்சி இதற்கு முன்னால் நடந்ததில்லை என்றே சொல்கிறார்கள்.
அதைப் போல் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே சிலை வைக்கும் கலாச்சாரம் மாறி உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கட்டப்பட்ட உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 2024 ஜன. 24 அன்று திறந்துவைத்தார். அதில் ஒரு ஜல்லிக்கட்டு வீரர் காளையை அடக்குவதைப் போன்ற சிலையையும் திறந்துவைத்தார்.
சிலை வைப்பதிலேயே சிலிர்ப்பான சம்பவமும் இந்த ஆட்சியில் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 27, 2022 அன்று கொட்டும் மழையில் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கர் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதேபோல் மதுரை பெருங்குடி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் வெண்கலச் சிலையை டிசம்பர் 8, 2022 அன்று திறந்து வைத்தார்.
அரசியல்வாதிகளுக்கு மட்டுமா சிலை? இல்லை இல்லை என்று பின்னணிப் பாடகர் டி.எம்.செளதரராஜன் நூற்றாண்டையொட்டி கடந்த ஆகஸ்ட் 16,2023 அன்று டி.எம்.எஸ் சிலையைத் திறந்து வைத்தார். இவருக்கு முன் டி.எம்.எஸ்க்கு மதுரை மண்ணில் மிகப் பிரம்மாண்டமாகத் தனியாக ஒரு விழாவையே நடத்தினார் இவரது அண்ணன் மு.க.அழகிரி.
திமுகவினர் தங்கள் சொந்தக் கட்சிக்காரர்களுக்கே சிலை வைத்துக் கொள்கிறார்கள் என யாரும் விமர்சிக்காதபடி எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட காந்தியின் முழு உருவச்சிலையை 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 14, 2022இல் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதே மாதிரி வடநாட்டுத் தலைவரான விபிசிங்கிற்கு 27.11.2023 அன்று சென்னையில் சிலை திறந்தார் ஸ்டாலின். இவருக்குச் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த அதே வேகத்தில் சிலை பொதுமக்கள் காட்சிக்கு வந்தது.
இந்த விழாவில் உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டதுடன் விபிசிங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது எங்கள் தாத்தாவுக்கு நாடாளுமன்றத்திலேயே சிலை இல்லை. அந்தக் குறையைத் தமிழ்நாடு போக்கிவிட்டது என நெகிழ்ச்சியாகக் கூறினர்.
இப்போது ரூ. 7.85 கோடி செலவில் மு. வரதராசன், தியாகி அண்ணல் தங்கோவுக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்துள்ளது இந்த அரசு.

மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் மணிமண்டபம் மற்றும் திரு.எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போன்று கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலை ஆகியவற்றையும் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.
இதற்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தையும் அங்கே அமைக்கப்பட்ட கலைஞர் சிலையையும் கடந்த 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை டிசம்பர் 1, 2023 அன்று திறந்து வைத்தார் .

10.08.2023 டிபிஐ கல்வி வளாகத்தில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகனுக்குச் சிலையைத் திறந்துவைத்தார்.
நவம்பர் 1, 2023 அன்று கடலூர் மாநகராட்சியில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையைக் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இப்படிக் கடந்த மார்ச் 6, 2022இல் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சியில் பெரியார் சிலையை ஏப்ரல் 5, 2022 அன்று திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதி சிலையை டிசம்பர் 29, 2023 அன்று திறந்து வைத்தார்.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை கடந்த ஜூன் 10,2023 அன்று ஸ்டாலின் திறந்துவைத்தார்.

நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவையொட்டி டிசம்பர் 25, 2021 அன்று ஸ்டாலின் ஆட்சியில் சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் 95 லட்சத்தில் நிறுவப் பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆகியோர் சிலைகளைக் கடந்த பிப்ரவரி 13, 2023இல் திறந்து வைத்தார்.
கடந்த 2023 மார்ச் 10 அன்று கோயம்புத்தூரில் வ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியோர் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தார்

தஞ்சையில் டிசம்பர் 29, 2021 அன்று அண்ணா மற்றும் கருணாநிதியின் சிலைகளைத் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் குறிச்சி குளக்கரையில் ஐயன் திருவள்ளுவருக்குத் தமிழ் எழுத்துக்களால் சிலை வடிவமைக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில்தான் திறந்துவைத்தார்.
இப்படி திமுக ஆட்சி சிலைகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்து வருகிறது.






-
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! மே.வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீர் மீட்டிங் -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
ஸ்டாலினுக்கு போன் அடித்த ராகுல்.. அப்ப எல்லாமே தப்பா.. செல்வப்பெருந்தகை அப்டேட் -
வெல்லும் தமிழ்ப்பெண்களே! தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்! ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து -
"திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை மாத்திட்டாங்களே..” முதல்வர் ஸ்டாலின் கிண்டல்! -
யுபிஎஸ்சி தேர்வில் 56 பேர் தேர்ச்சி! நான் முதல்வன் திட்டத்தின் முதற்பகுதியே இப்படியா? ஸ்டாலின் -
தேர்தல் முடிந்ததும் அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போயிவிடும்.. நிதிஷ் நிலமைதான் எடப்பாடிக்கு.. ஸ்டாலின் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்












Click it and Unblock the Notifications