பணமே இல்லாமல் மெரினாவில் தங்கலாம்.. உதயநிதி திறந்து வைத்த காப்பகத்தில் என்னென்ன வசதிகள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் 2400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. சுமார் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கவும், அவர்களுக்கு தேவையான பாய், தலையனை மற்றும் போர்வை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட உள்ளன.
சென்னையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்றால் அது மெரினா கடற்கரை தான். தமிழ்நாட்டில் இருந்து சென்னை வரும் மக்கள் மறக்காமல் செல்லும் இடமாக மெரினா கடற்கரை இருக்கிறது. சென்னை மக்களும் தினமும் மெரினாவிற்கு சென்று கடற்கரைகளில் அமர்ந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்த வகையில் மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிகளில் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்து வருகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரயில் தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ந்த நாடுகளில் உள்ள கடற்கரைக்கு இணையாக நீலக்கொடி சான்றிதழுடன் அழகுப்படுத்துவது, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது மெரினா கடற்கரை பார்க்கவே ரம்மியாக இருக்கிறது. அதேநேரம் மெரினாவை பொறுத்தவரை இரவு 10 மணிக்கு மேலாக கடற்கரைக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது.ஆனால் மெரினா கடற்கரையின் மணல் பரப்பில் இரவு நேரங்களில் ஏராளமான வீடில்லாத பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக படுத்து உறங்குகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், சாலையோரங்களில் தானம் கேட்பவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளாக உள்ளார்கள். சென்னைக்கு ஓடி வந்த பலர் வீடு இல்லாமல் மெரினா தான் கதி என்று இருக்கிறார்கள்.
பொது வெளியில் உறங்கும் இவர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் இல்லை. எனவே இவர்களுக்காகவே சென்னை மாநகராட்சி புதிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறது. அதன்படி வீடு இல்லாதவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகம் ஒன்றை சென்னை மாநகராட்சி கட்டி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் 2,400 சதுர அடி பரப்பளவில் ரூ.86,20,000 மதிப்பீட்டில் புதிதாக இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காப்பகத்தை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த புதிய காப்பகத்தை பொறுத்தவரை சுமார் 80 பேர் ஒரே நேரத்தில் தங்க முடியும். காப்பகம் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவையான அளவிற்கு கழிப்பறைகள் மற்றும் மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் தங்குபவர்களுக்கு பாய், தலையணை மற்றும் போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இந்த இரவு நேர காப்பகத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு தங்குபவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து உணவு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications