திமுகவினர் கார்களில் ''வேண்டாம் CAA- NRC'' என்ற ஸ்டிக்கர்... புதிது புதிதாக யோசித்து போராட்டம்
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுகவினர் தங்கள் கார்களில் ''வேண்டாம் CAA- NRC'' என்ற ஸ்டிக்கரை ஒட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே திமுக மகளிரணியினர் கோலம் போட்டு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட போராட்டமாக ஸ்டிக்கர் ஒட்டுவதை கையில் எடுத்துள்ளனர் திமுகவினர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார் தனது கார் உட்பட மற்ற கட்சியினர் கார்களிலும் ''வேண்டாம் CAA- NRC'' என்ற ஸ்டிக்கரை தானே கைப்பட ஓட்டினார்.

திமுக எதிர்ப்பு
குடியுரிமைச் சட்டத்தை தொடக்கம் முதலே மிக கடுமையாக எதிர்த்து வரும் திமுக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆர்ப்பாட்டம், பேரணி, எதிர்ப்பு கோலம் என்ற வரிசையில் கார்களில் ''வேண்டாம் CAA- NRC'' என்ற ஸ்டிக்கர் ஒட்டுவதும் இணைந்துள்ளது.

ஸ்டிக்கர்
திமுகவினர் தங்கள் கார்களில் ''வேண்டாம் CAA- NRC'' என்ற ஸ்டிக்கரை ஒட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். நேற்று முதல் இந்த புதுமையான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். சொந்த கார்களில் அவரவர் விருப்பத்தின் பேரில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால் காவல்துறையினரால் எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது.

தொடர் போராட்டம்
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இந்திய அளவில் மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும் தான் அதிகளவில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை 6 பேரணிகளை நடத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. இதேபோல் திமுக ஆர்ப்பாட்டம், பேரணி, கோலம் என மூன்று வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

அடுத்தக்கட்டம்
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள திமுக தலைமை அதற்கான புதிய புதிய யோசனைகளை தீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications