சிறுபான்மையினரின் கல்வி முன்னேற்றத்தை முடக்குவதா? மத்திய அரசு மீது தமிமுன் அன்சாரி பாய்ச்சல்!
சென்னை: சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்துவதாக மத்திய அரசு கூறியிருப்பது கொஞ்சம் கூட நியாயமற்ற செயல் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
பெருமுதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதில் மட்டும் பெருமைப்படக் கூடாது என அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கல்வி உதவித் தொகை
கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கென 'PRE METRIC SCHOLARSHIP என்று அறிவிக்கப்பட்டிருந்த கல்வி உதவித்தொகையை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.ஏற்கனவே RTE திட்டம் மூலம் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதால் இத்திட்டத்தை ரத்து செய்கிறோம் என ஒன்றிய அரசு காரணம் கூறியுள்ளது.

தரகு வேலை
பெருமுதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதில் பெருமைப்படும் ஒன்றிய அரசு, கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன்கனை ரத்து செய்து அவர்களை திருப்தி படுத்துகிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்த ஏழை .எளிய மாணவ, மாணவிகளின் கல்வி உதவிகளை நிறுத்துவதில் அக்கறை காட்டுகிறது. இது எந்த வகையிலும் நியாயமில்லை.

குரல் எழுப்பிடுக
இம்முடிவு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மட்டுமின்றி, மாற்று திறனாளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பாதிக்கிறது . எனவே ஒன்றிய அரசின் இம் முடிவை அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து குரல் எழுப்பிட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளும், சமூக நீதி இயக்கங்களும் இதற்கு எதிராக செயலாற்ற வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது பதிவில் கூறியிருக்கிறார்.

ஆர்ப்பாட்டம்
இதனிடையே சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை நிறுத்திய விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ள அவர் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications