காட்டுப்பள்ளி: போலீசார் மீது கல்வீச்சு.. வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை!
திருவள்ளூர்: காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் மறியலின்போது வடமாநில தொழிலாளர்கள் கல் வீசியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பத்தில் தொடர்புடைய 29 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எல்.என்.டி கப்பல் கட்டும் நிறுவனம், துறைமுகம் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்ற நபர் கடந்த 35 நாட்களுக்கு முன்பாக அங்கு வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அமரேஷ் பிரசாத் மது அருந்தியுள்ளார். பின்னர் மதுபோதையில் அவரின் வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமரேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து உயிரிழந்த தொழிலாளி அமரேஷ் பிரசாத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திடீரென்று வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாகக் கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகக் காவல்துறையினர் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் காவல்துறையினர் வந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் ஒரு சில காவலர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அதிரடியாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் அமைதி காத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆவடி கூடுதல் ஆணையர் பவானிஸ்வரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து கல்வீசித் தாக்குதலில் ஈட்டுப்பட்ட 29 வடமாநிலத் தொழிலாளர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகக் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காட்டுப்பள்ளி பகுதியில் காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளது குறிப்பிடத்தகது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications