பெங்களூரில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்து வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ரயில்வே சேவையை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

 வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

இதையடுத்து 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடம் வழியாகவும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடம் வழியாகவும் , 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும் இயக்கப்பட்டது. 5-வது சேவையாக சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி இந்த ரயிலின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை - பெங்களூரு - மைசூரு

சென்னை - பெங்களூரு - மைசூரு

இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மதியம்12.20-க்கு மைசூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். தென் மாநிலங்களின் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் இயங்கும் இந்த ரயில் பயணிகள் மத்தியில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விபத்துக்களில் சிக்குவது..

விபத்துக்களில் சிக்குவது..

தற்போது நாடு முழுவதும் 10 வந்தே வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. வந்தே பாரத் ரயிலில் விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் உள்ளன. முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியதில் இருந்தே அடிக்கடி விபத்துக்களில் சிக்குவதும் பழுது அடைந்து நிற்பதுமான நிகழ்வுகள் நடைபெற்றது.

 ரயில் மீது கல் வீசி தாக்குதல்

ரயில் மீது கல் வீசி தாக்குதல்

குறிப்பாக, கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் மோதி ரயிலின் முன்பகுதி சேதம் அடைவது அடிக்கடி நடைபெற்றது. அதுபோக ரயில் மீது சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை-மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர். மைசூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது.

 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

2 ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

பெங்களூர் கே.ஆர்.புரம்-கன்டோன்மண்ட் ரயில் நிலையங்கள் இடையே வந்தேபாரத் ரயில் வந்த போது மர்மநபர்கள் சிலர் ரயில்கள் மீது கற்களை வீசினர். இதில் ரயிலின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் மீது கல் வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த ரயில்வே போலீசாரும் ரயிலின் உடைந்த கண்ணாடியை பார்வையிட்டனர். ரயில் மீது கல் வீசியவர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+