வங்கக்கடலில் உருவாகப்போகும் புயல்.. எப்போது? வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்.. தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் நாளை கத்தரி வெயில் காலம் துவங்குகிறது. இதனால் மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில் தான் வங்கக்கடலில் மே 8 ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை கடந்து வெயில் மக்களை வாட்டியது. இதற்கிடையே தான் கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் வெயிலின் கோரபிடியில் இருந்து மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தான் புதிய அறிவிப்பு வெளியானது. அதாவது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் என்பது அதிகமாக இருக்கும். இருப்பினும் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலை சமாளிக்கும் வகையில் வருண பகவான் கருணை காட்டி வருகிறார். இதனால் மாநிலத்தின் பல இடங்களில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் இது வடதமிழகத்தில் மேல் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி உள்ளது.
இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக மே 7 ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். அதன்பிறகு இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 8 ல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சினை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி











Click it and Unblock the Notifications