சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல்ங்க.. வங்கக் கடலில் காற்றழுத்தம்.. சூறாவளி வீசும்.. கடலூரில் புயல் கூண்டு ஏற்றம்.. மழை இருக்கு

கடலூர் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், 14ம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது... இதனிடையே, கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில பகுதியை ஒட்டியுள்ள வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது..

இன்னும் ஒரு வாரம்.. மண்ணையும் மக்களையும் குளிர்விக்கப் போகும் மழை! கொஞ்சம் கவனமா இருங்க மக்களே! இன்னும் ஒரு வாரம்.. மண்ணையும் மக்களையும் குளிர்விக்கப் போகும் மழை! கொஞ்சம் கவனமா இருங்க மக்களே!

 வார்னிங் கூண்டு

வார்னிங் கூண்டு

இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது... இந்நிலையில், : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

 சூறாவளி வீசும்

சூறாவளி வீசும்

"ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த மண்டலம், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதன் காரணமாக, வங்கக் கடலில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.. மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும்.மேலும், கேரள, கர்நாடக அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

 சின்னக்கல்லார்

சின்னக்கல்லார்

எனவே மீனவர்கள் வரும், 14ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, பந்தலுாரில், 14 செ.மீ., மழை பெய்துள்ளது. சின்னக்கல்லார், 7; அவலாஞ்சி, 5; சேலம், பெரியாறு, 1 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலை பகுதிகளில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 அபாயம் + கூண்டு

அபாயம் + கூண்டு

இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் சுமார் 59 மீனவ கிராமங்கள் உள்ளன.. தினமும் 10 ஆயிரம் மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று வருகிறார்கள்.. ஆனால், அண்மை காலமாக கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்த அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.. காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.. ஆனால், இதை பற்றி முறையாக அறிவிப்பு வெளியிடப்படாததால் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது

English summary
storm warning cage hoisted at Cuddalore port office due to storm symbol and heavy rain chance in tamilnadu கடலூர் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X