ஸ்ட்ராபெர்ரி நிலவு.. எப்படி பார்ப்பது? இந்தியாவில் தெரியுமா? முழு விவரம்
சென்னை: வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! நாளை வானில் 'ஸ்ட்ராபெர்ரி நிலவு' தோன்றுகிறது. ஸ்ட்ராபெர்ரிகளை அறுவடை செய்யும் காலத்தில் இந்நிலவு தோன்றுவதால் வட அமெரிக்க பழங்குடியினர் இந்த நிலவை, இவ்வாறு அழைக்கின்றனர். இந்த நிலவு பொன்னிற ஒளியுடன் பிரகாசமாகவும் பெரியதாகவும் காட்சியளிக்கும்.
நாளை பௌர்ணமி. அன்றைய தினத்தில்தான் ஸ்ட்ராபெர்ரி நிலவு உதயமாகிறது. சரியாக மாலை 6.44க்கு நிலவு உதிக்கும். ஸ்ட்ராபெர்ரி நிலவு வானத்தில் சற்று தாழ்வாக தோன்றும். இதனால் பூமியின் வளிமண்டலத்தில் அதிக ஒளியை செலுத்தும். எனவே பார்ப்பதற்கு மற்ற நிலவை விட அளவிலும் நிறத்திலும் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

ஸ்ட்ராபெர்ரி நிலவை காண ஆர்வமாக உள்ளவர்கள், ஒளி மாசு இல்லாத தெளிவான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். DSLR கேமரா இருந்தால் நிலவை தெளிவாக படம் பிடிக்க முடியும். இந்தியாவில் வானிலை தெளிவாக இருந்தால், இங்கிருந்தும் நிலவை பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலார் போன்றவை இருப்பின் நிலவு இன்னும் தெளிவாக தெரியும். ஸ்ட்ராபெர்ரி நிலவு என பெயர் இருப்பதால், ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு இருக்காது. பொன்னிறமாகத்தாக் தெரியம்.
இந்தியாவில் ஜூன் மாதம் மழைக்காலத்தின் தொடக்கமாகும். ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மேகமூட்டம் அதிகமாக இருக்கும். எனவே சில இடங்களில் இந்த நிலவை பார்க்க முடியாமல் போகலாம். தமிழ்நாட்டில் குறிப்பாக இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் மேக மூட்டம் அதிகமாக இருக்கலாம். இந்த மாவட்ட மக்கள் ஸ்ட்ராபெர்ரி நிலவை முழமையாக ரசிக்க முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் டெல்டா மற்றும் தென் மாவட்ட மக்கள் நிலவை முழுமையாக கண்டு ரசிக்க முடியும்.
எனவே ஒளி மாசு இல்லாத இடத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த நிலவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications