ஸ்ட்ரிக்ட் அதிகாரி! களமிறங்கிய CBI டிஎஸ்பி மோகித் குமார்! அஜித் குமார் கேஸில்.. நிகிதாவிற்கு சிக்கல்
சென்னை: திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது. இந்த வழக்கு முறையாக நேற்று சிபிஐயிடம் வழங்கப்பட்டது.
டெல்லி சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார். அவர் இந்த வழக்கின் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். பல மாநிலங்களில் முக்கியமான வழக்குகளை விசாரித்த சிபிஐ அதிகாரி ஆவார் இவர். இவர் மிகவும் ஸ்ட்ரிக்ட் அதிகாரி என்றும் கூறப்படுகிறது. இவரின் வருகை காரணமாக வழக்கு விசாரணை மிக தீவிரமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குமார் மரண வழக்கை இவர் விசாரிக்க உள்ளார். இது தொடர்பான வழக்குடன், நகை திருட்டு தொடர்பான வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும், என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ இந்த நகை திருட்டு வழக்கிலும் உண்மையை வெளியே கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பது தெரியவருவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், அடுத்த வாரத்திற்குள் சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது சிலர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரவ விட்டதாகக் கூறினார். குறுக்கிட்ட நீதிபதிகள், இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பதிலளித்தனர்.
வழக்கு தொடர்பாக மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்திருக்கிறார். மீதி விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடிக்க வேண்டும். அதற்கு ஏற்ப, அடுத்த ஒரு வாரத்துக்குள் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும், குறிப்பாக சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதோடு அஜித்குமார் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது.. இது தொடர்பான வழக்குடன், நகை திருட்டு தொடர்பான வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும், என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சிபிஐ திட்டம்
இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐ கைக்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ முக்கியமான பல முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக நிகிதா தொடர்பான பின்னணி சிபிஐ விசாரணையில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. சிபிஐ விசாரணையில், போலீசார் மேற்கொண்ட விசாரணை, வீடியோ ஆதாரங்கள், போலீசார் செய்த கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் ஆய்வு செய்யப்படும். விசாரணை முடிவில் போலீசாருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு வலுவாக்கப்படும்.
2.முக்கியமாக இதில் சிசிடிவி ஆதாரங்கள் போலீஸ் மீதான குற்றத்தை உறுதி செய்யும். சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்படும். இதில் சிசிடிவி ஆதாரங்கள்தான் வழக்கின் முடிவை இறுதி செய்யும்.
3. இரண்டாவதாக.. அந்த இளைஞர் அஜித் குமாரை கொலை செய்யும் அளவிற்கு போலீசாருக்கு பிரஷர் கொடுத்தது யார் என்ற விசாரணை விரைவில் தொடங்கப்படும். சிபிஐ பெரும்பாலும் அந்த பின்னால் உள்ள புள்ளியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தும் என்று கூறப்படுகிறது.
4. காவல் துறையினர் ஏன் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் தனி இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்? என்ற கேள்வி உள்ளது. இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.
5. யார் அழுத்தத்தின் பெயரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 30 கி.மீ தொலைவில் இருந்து சீருடை அணியாமல் போலீஸ் ஏன் விசாரணைக்கு வந்தது? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அந்த அளவிற்கு என்ன அவசரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
6. ஒரு திருட்டு வழக்கிற்கு இவ்வளவு தூரம் போலீஸ் வந்தது எப்படி? இதில் அடிபடும் ஐஏஎஸ் அதிகாரி யார்? என்றெல்லாம் கேள்விகள் தீவிரமாக உலவி வருகின்றனர். இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டிய கட்டாயம் சிபிஐக்கு உள்ளது.
7. நிகிதாவின் பின்னணியை சிபிஐ அவிழ்க்கும் என்றும் கூறப்படுகிறது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. "2010இல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும்" என்று கூறி நிகிதா மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications