Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதிவாரி கணக்கெடுப்பு, நீதித்துறை, சிறுபான்மை இடஒதுக்கீடு-சமூக நீதி மாநாட்டில் முழங்கிய மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; நீதித்துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அகில இந்திய சமூகநீதிக்கான கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 Struggle for attainment of social justice issue is concerning for all states: CM MK Stalin

சமூக நீதிக்கான கூட்டமைப்பின் மாநாட்டில் இணையவழியில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்ட செயல்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

* இசுலாமியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களை உயர்சாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்துள்ளார்கள்.

* இசுலாமியர்களிடம் இருந்து பறித்து வேறு இரண்டு சமூகத்துக்கு பிரித்துக் கொடுத்து இசுலாமியர்களுக்கும் அந்தச் சமூகத்துக்கும் மோதலை உருவாக்கி இருக்கிறார்கள்.

* அதே போல பட்டியலின மக்களுக்குக்குள் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. நடக்க இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இதனை செய்துள்ளார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் - வாக்களிக்காதவர்கள் என்று நினைத்து இந்த பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாகவே சமூகநீதி கொலை செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில்!

* பட்டியலின மக்களின் இடஒதுகீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

* பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

* சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

* நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

* இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.

 Struggle for attainment of social justice issue is concerning for all states: CM MK Stalin

* சாதிவாரி கணக்கெடுப்பின் ஒன்றிய அரசு நடத்தி- அதன் தரவுகளை வெளியிட வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.

* திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்! வழிகாட்டும்! செயல்படுத்தும்! இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்த வகையில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. Such committees should be established in all the states. I appeal to political leaders in all states to take up this initiative. We should
collectively spearhead the resolutions to be passed in this meeting. (இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.)

* தி.மு.க. சார்பில் இன்றைய தலைமுறையினருக்கு சமூகநீதி வரலாற்றை எடுத்துச் சொல்லும் வகையில், Study Circles ஆரம்பித்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும், அவரவர் மாநிலங்களில் தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் - மகாத்மா ஜோதிராவ் புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களில் Study Circles துவங்கி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமூகநீதி பற்றிய புரிதலையும் - விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்.

இந்தியா முழுமைக்கும்

* கூட்டாட்சியை

* மாநில சுயாட்சியை

* மதச்சார்பின்மையை

* சமத்துவத்தை

* சகோதரத்துவத்தை

* சமதர்மத்தை

* சமூகநீதியை - நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும்.

அது வெறும் குரலாக மட்டும் இருக்க முடியாது. தனித்தனி குரலாக மட்டும் இருந்தால் பயனில்லை. கூட்டுக் குரலாக - கூட்டணிக் குரலாக அமைய வேண்டும்.

However idealistic an ideology may be, for it to succeed, the unity among the parties which has accepted the ideology is of great importance. Such a unity is not enough, if it is in only few states. It has to happen in every state. It has to be for the whole of India. It is for that unity, federations like this will serve as the foundation.
Let's fight together to create, an India of Social Justice, an India of Equal Justice, an India of Brotherhood.

 Struggle for attainment of social justice issue is concerning for all states: CM MK Stalin

(எத்தகைய உன்னதமான கருத்தியலாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கு - அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட சக்திகளின் ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். அத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலத்தில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அது அகில இந்தியா முழுமைக்குமானதாக ஒன்றாதல் வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டமைப்புகள் அடித்தளம் அமைக்கும்.
சமூகநீதி இந்தியாவை உருவாக்க - சமதர்ம இந்தியாவை உருவாக்க - சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.) இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில்

இம்மாநாட்டில்,

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்,

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன்,

பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்,

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா,

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா,

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்திர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்,

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்,

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன்,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவஹிருல்லா,

 Struggle for attainment of social justice issue is concerning for all states: CM MK Stalin

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன்,

அசாம் நாடாளுமன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா,

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன்,

PAGAAM தேசிய அழைப்பாளர் டாக்டர் பி.என். வாங்,

AIOBC கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி. கருணாநிதி,

அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன்,

இந்திய மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் பி.டி. போர்கார்,

BAMCEF தேசியத் தலைவர் டாக்டர் வாமன் மேஷ்ராம்,

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் டாக்டர் லஷ்மன் யாதவ், டாக்டர் சுராஜ் மண்டல், டாக்டர் ரத்தன் லால், சம்விதான் பச்சாவோ சங்கர்ஷ் சமிதியின் டாக்டர் அனில் ஜெயிந்த்,

மத்திய பிரதேசம் - பிச்சுடா வர்க் சம்யுக்த் சங்கர்ஷ் மோர்ச்சா முதன்மை ஒருங்கிணைப்பாளர் பகதூர் சிங் லோடி,

மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல்,

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன்,

ஹரியானா லோக்தந்திர சுரக்ஷ கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சயினி,

ராஷ்டிரிய சமாஜ்பக்ஷி தேசிய தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர்,

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் கே. கேசவ ராவ்,

 Struggle for attainment of social justice issue is concerning for all states: CM MK Stalin

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி. முகமது பஷீர்,

பீகார் - ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா,

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்,

தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால்

ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+