பிளஸ் 2 ரிசல்டு வந்துச்சே.. மார்க் லிஸ்ட் வாங்குனீங்களா? ஒரிஜினல் ரெடி - எங்கு எப்போது வாங்கலாம்?
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் ஜூலை 31 ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் இருவேறு தினங்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த தேர்வெழுதிய மாணவ மாணவியருக்கு ஏற்கனவே மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்கப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் மாணவ மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இன்னும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாத சூழலில் தற்போது தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, "மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates)/ மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வழங்குதல்.
மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 31.07.2023 அன்று முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates) மதிப்பெண் பட்டியலினை (Statement Of Mark) பெற்றுக்கொள்ளலாம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications