சென்னை ரயில்வே வாரிய தேர்வு மையங்களை காஷ்மீரில் ஒதுக்குவதா? சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னை ரயில்வே வாரிய தேர்வு மையங்களை ஜம்மு காஷ்மீரிலும் குஜராத்திலும் ஒதுக்கீடு செய்துள்ளதற்கு லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்ஆர்பி சென்னை 601 ரயில் நிலைய அதிகாரி காலியிடங்களுக்கு 2020 டிசம்பருக்கும் 2021 ஜூலைக்கும் இடையே முதல்நிலைத் தேர்வு நடத்தியது .இந்த முதல்நிலை தேர்வு தமிழகத்திலேயே உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது.

இதற்கான முடிவுகள் மார்ச் 22 க்கும் ஏப்ரல் 22 க்கும் இடையே வெளியிடப்பட்டன. தேர்வானவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட வேண்டும் .இந்த தேர்வு தெற்கு ரயில்வேயில் சென்னை ஆர் ஆர் பி க்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் வைப்பதுதான் நியாயமானதும் வசதியானது மாகும்.
ஆனால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா விலும் அலகாபாதிலும் மைசூரு உடுப்பி சிமோகா விலும் தேர்வு மையங்கள் வைக்கப்பட்டுள்ளன. மே 9 ஆம் தேதி தேர்வு நிச்சயிக்கப்பட்டுள்ளது . சிஇஎன்1/ 2019 என்ற விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்த இந்த தேர்வர்களுக்கு இப்படி வெளிமாநிலங்களில் மையங்களை ஏற்படுத்துவது வேற்று மொழி பேசும் இடங்களில் தமிழக விண்ணப்பதாரர்கள் திணற வைப்பதற்கு வழிவகுக்கும்.
மாற்றுதிறனாளியான ஒரு விண்ணப்பதாரருக்கு அலகாபாத் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்தும் ஜனநாயக பூர்வமற்றது மட்டுமல்ல நியாயமானதும் இல்லை. தேர்வர்களுக்கு எதிரான புறக்காரணியாக தேர்வு நடைமுறைகள் அமையக்கூடாது.
இது குறித்து சென்னை ஆர் ஆர் பி தலைவர் திரு அழகர்ஜெகதீசன் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவரை இதில் தலையிட்டு இந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்குமாறும் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications