வீடு, நிலம் வாங்குபவர் கவனத்துக்கு.. சார் - பதிவாளர் அலுவலகத்தில் குறைகிறதா பத்திரப்பதிவு? அதிரடிகள்
சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பத்திரப்பதிவு குறைவாக நடைபெறும் சார் பதிவு அலுவலகங்கள் குறித்தும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பதிவுத்துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கினை நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்திருக்கிறது.
இலக்கு: இந்த இலக்கை எட்டும்வகையில், பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வாரி வழங்கி கொண்டிருக்கிறது.. இதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஓரளவு பலன் கிடைத்து வருவதுடன், அதன் வருவாயில் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

அதேபோல, பொதுமக்களின் நன்மை கருதி, அவர்களின் வசதி கருதி, ஏராளமான சலுகைகளை அளித்து வருகிறது.. முக்கியமாக, பத்திரங்களை பதிவு செய்யும்போது, சில பத்திரங்களை சார் - பதிவாளர் நிலுவையில் வைத்துவிடும் நிலைமை உள்ளது.. அதாவது, சர்ச்சையான பத்திரங்கள், பட்டாவின் உண்மை தன்மை குறித்த சந்தேகம், இணைய வழியில் பட்டா குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பத்திரங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு விடுகின்றன.
பத்திரங்கள்: அதனால்தான், உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது, நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும் என்று சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த வாரம்கூட உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், பத்திரப்பதிவு குறைவாக உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களை மூடுவதற்கான பணிகளை பதிவுத்துறை துவக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
வருவாய் இலக்கு: தமிழகத்தை பொறுத்தவரை, 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வரும்நிலையில், பெரும்பாலான அலுவலகங்களில் வருடத்துக்கு 2,000த்துக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன.
ஆனால், சில பகுதிகளில் மட்டும் வருடத்துக்கு வெறும் 200 முதல் 500 பத்திரங்கள் தான் பதிவு செய்யப்படுகிறதாம்.. எனவே, இந்த அலுவலகங்களால், வருவாய் இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது. வருவாய் எட்ட முடியாத சூழலில், இந்த அலுவலகங்களில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் எழுகிறதாம்..
இதற்கு தீர்வாக, குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை மூடுவது குறித்து பதிவுத்துறை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
என்ன காரணம்: இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, வருவாய் குறைவான இந்த அலுவலகங்களை ஒரேடியாக இழுத்து மூடாமல், அருகிலிருக்கும் வேறு சார் -பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.. அதிக பத்திரங்கள் பதிவாகும் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட சில கிராமங்களை பிரித்து, வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்காக, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டது எப்போது, கடந்த 3 நிதி ஆண்டுகளில் பதிவான பத்திரங்களின் எண்ணிக்கை விபரங்கள் என்னென்ன என்பதையெல்லாம் பட்டியலாக தயாரித்து, வரும் 29க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications