சாதி என்னன்னு டாக்டர் கேட்டது அநாகரிகம்: கிருஷ்ணசாமிக்கு சுப.வீ. கண்டனம்
சென்னை: செய்தியாளர்களிடம் என்ன சாதி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டதற்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து அதனது செயல்பாடுகளை நியாயப்படுத்தி டாக்டர் கிருஷ்ணசாமி பேச தொடங்கியதில் இருந்து ஊடகங்கள் அவரை புறக்கணித்தன. இதனால் கடும் கோபத்தில் இருந்து வருகிறார் கிருஷ்ணசாமி.

லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இத்தோல்வியை டாக்டர் கிருஷ்ணசாமியால் ஏற்க முடியவில்லை.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்தார். அப்போதும் ஊடகங்களை மிக இழிவாக விமர்சித்துப் பேசினார்.
மருத்துவர்களிடம் போனால் என்ன உடம்புக்கு என்று கேட்பார்கள். ஆனால் இங்கு ஒரு "டாக்டர்" என்ன சாதி என்று கேட்கிறார். அநாகரிகம்! #DrKrishnasamy
— SubaVeerapandian (@Suba_Vee) May 29, 2019
மேலும் லோக்சபா தேர்தலில் பாஜக அணிக்கு வாக்களிக்காத தமிழக மக்களை பிற்போக்கானவர்கள் எனவும் வசைபாடினார் கிருஷ்ணசாமி. தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமியிடம் நீங்கள் ஏன் தோல்வியை சந்தித்தீர்கள்? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி, நீ யாரு? நீ எந்த சாதி? நீ எந்த ஊரு? என ஒருமையில் விமர்சித்தார். இதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது புதிய தமிழகம் கட்சியினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இச்சம்பவத்துக்கு பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜக தவிர இதர கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருந்தபோதும் டாக்டர் கிருஷ்ணசாமி தாம் பேசியதை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.
அவர் இது தொடர்பாக வீடியோ பதிவும் வெளியிட்டிருந்தார். தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், நியூஸ் 18 உரிமையாளர் அனில் அம்பானியிடம் கேள்வி கேளுங்கள் என்றெல்லாம் குமுறி குமுறி பதிவு போட்டிருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
இதனிடையே திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது ட்விட்டர் பக்கத்தில், " மருத்துவர்களிடம் போனால் என்ன உடம்புக்கு என்று கேட்பார்கள். ஆனால் இங்கு ஒரு "டாக்டர்" என்ன சாதி என்று கேட்கிறார். அநாகரிகம்! #DrKrishnasamy" என பதிவிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சுப.வீயை வழக்கம் போல விமர்சிப்பவர்கள் இந்த பதிவிலும் மிக இழிவான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். சுப.வீயை ஜாதியின் பெயராலும் திமுக ஆதரவு என்பதாலும் மிக மோசமாக விமர்சித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications