ரகுமான் கான் மகன் சுபேர் கானுக்கு திமுகவில் முக்கியப் பதவி! ஸ்டாலின் செலக்ட் செய்த பின்னணி!
சென்னை: மறைந்த திமுகவின் மூத்த முன்னோடி ரகுமான் கானின் மகன் சுபேர் கானுக்கு திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் என்ற மாநில அளவிலான முக்கிய பதவியை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.
டாக்டர் மஸ்தானின் மறைவுக்கு பிறகு திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் பதவியிடம் காலியாக இருந்து வந்தது.

இந்த இடத்தை பிடிக்க திமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் பலரும் போட்டி போட்டனர். இந்நிலையில் டாக்டர் சுபேர் கான் இந்த ரேஸில் வெற்றிபெற்றிருக்கிறார்.
திமுக மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளராக உள்ள சுபேர் கான், பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி ஆக்டிவாக இயங்கி வருவதன் மூலம் தலைமையின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய வட்டத்தில் சுபேர் கான் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல் ரகுமான் கானின் நண்பரான துரைமுருகனின் ஆசியும் சுபேர் கானுக்கு உண்டு.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக சுபேர் கான் சென்னையில் பிரபலமான ஆர்த்தோ மருத்துவரும் கூட. படித்தவர், பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர், மருத்துவர், ஓடி ஆடி உழைக்க வயதில் இளையவர், என பல காரணங்களின் அடிப்படையில் சுபேர் கானை திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக ஸ்டாலின் செலக்ட் செய்திருக்கிறார்.

மறைந்த ரகுமான் கானை பெருமைப்படுத்தும் விதமாகவும், கவுரவப்படுத்தும் வகையிலும் அவரது மகனுக்கு முக்கியப் பதவி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications