சார் பதிவாளர் அலுவலகங்களில்.. இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு.. சுபமுகூர்த்த தினத்தில் தமிழக அரசு செம
சென்னை: இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வழக்கமாக, சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுவது வழக்கம்.. இப்படித்தான், கடந்த ஆடி 18, ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினம் என பல்வேறு நிகழ்வுகளின்போது, பதிவுத்துறை கூடுதலான டோக்கன்களை ஒதுக்கீடு செய்தது.

சுபமுகூர்த்தம்: அந்தவகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்களை ஒதுக்க, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற பதிவுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
டோக்கன்கள்: இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில்,"அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
அந்த வகையில், சுபமுகூர்த்த தினமாக கருதப்படும், 23.11.23 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகம்: அதனடிப்படையில், ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications