ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதையே திமுகவும், அதிமுகவும் தங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தி அதை அப்படியே தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளன.

Subramanian Swamy says that it is not possible to release 7 tamils

இந்த நிலையில் இது சாத்தியம் இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் பேசுகையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை என்பது சாத்தியமே இல்லை.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது ஏற்புடையதாக இல்லை. வெறும் 5 இடங்களை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டால் நான் பிரசாரம் செய்வேன்.

நாட்டல் பாஜகவால் மறுமலர்ச்சியை கொண்டு வரமுடியும். வேறு எந்த கட்சியாலும் முடியாது. மீண்டும் பெரும்பான்மை பெற்று மத்தியில் மோடிதான் ஆட்சியை பிடிப்பார் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+