தலைநிமிர்ந்த காங்கிரஸ்.. குலுங்கிடுச்சு தெலுங்கானா.. காரணம் இவரா?.. அப்படியே வியந்து பார்த்த ராகுல்
சென்னை: தெலுங்கானாவின் வெற்றியானது, பாஜகவின் கனவை மண்ணோடு மண்ணாக்கியுள்ளது.. கேஎஸ்ஆரின் கனவானது தூள் தூளாக தகர்க்கப்பட்டுள்ளது.. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் என்றால், அந்த காங்கிரசுக்கு அடித்தளமாக இருந்தது யார் தெரியுமா?
அவர்தான் சுனில்.. அரசியல் வியூகம் வகுப்பவர்.. சுனில் கனுகொலு என்பது அவரது முழுப்பெயர்.. கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.. ஆனால் வளர்ந்தது என்னவோ நம்முடைய சென்னையில்தான்..

வியூகங்கள்: அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து தந்து, அதன்மூலம் தன் திறமையை நிரூபித்தவர்.. அந்தவகையில், பாஜக, திமுக கட்சிகளுக்கு ஆலோசகராகவும் செயல்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் வேலை பார்த்தார்.. கடைசியில் இந்த கட்சியிலிலேயே சேர்ந்துவிட்டார்..
கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மை வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தபோது, சுனிலின் வியூகம் அனைவராலும் பேசப்பட்டது.. முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தலைமை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.
தேர்தல்: இந்நிலையில்தான், தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தலும் அறிவிக்கப்பட்டது.. மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக சுனில் நியமிக்கப்பட்டார். இந்த தேர்தல்களின் வெற்றிகள், எம்பி தேர்தலை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறும் என்பதால், சுனிலின் வியூகம் வேகம் எடுத்தது.
கேசிஆரை தோற்கடிக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை தந்ததுமே ராகுல் காந்தியே அசந்துபோய்விட்டார். அதனால்தானோ என்னவோ, 2 இடத்தைப் பிடித்திருக்கும் காங்கிரஸை, 3வது இடத்துக்கு தள்ளுவோம் என்று பாஜகவின் மிரட்டலும் அதிகமானது. கர்நாடகாவைப் போலவே, கேசிஆரை பின்னுக்கு தள்ளும் வேலையை கையில் எடுத்தார் சுனில்.
முதலாவதாக, 2 முறை ஆட்சி செய்துவிட்டு, 3 வது முறையும் ஆட்சி செய்ய தயாராகிவரும், கேசிஆருக்கு எதிரான வியூகம் வீசப்பட்டது.. அதன்படி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பாஜகவின் B டீம் என்ற ஆயுதத்தை மக்களிடம் கொண்டுசென்றது சுனில் டீம்.. அத்துடன், பிஆர்எஸ்ஸுக்கும் காங்கிரசுக்கும்தான் போட்டி என்று சொல்லி, பாஜகவை ஆட்டத்திலிருந்தே கழட்டிவிட்டது. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.
பூசல்கள்: அடுத்ததாக, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில அதிரடிகளை மேற்கொண்டார்.. அதாவது, பூசல்களுக்கு பெயர் போனது காங்கிரஸ் கட்சி.. இந்த பூசலைதான் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் என்பது வேறு விஷயம்..
ஆனால், இந்த பூசல்கள் தெலுங்கானாவையும் விட்டுவைக்கவில்லை.. எனவே, பல குழுக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருந்தால், மேலிடத்தில் இதைப்பற்றி சொல்லி, முழு கட்டுப்பாட்டை முதல்வேலையாக, கொண்டு வந்தது சுனில் டீம்..
ஷர்மிளா: தெலுங்கானாவில் காங்கிரஸ் தலையெடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தார்.. அதேபோல, ஒய்எஸ்ஆர் மகள் ஷர்மிளா தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.
காங்கிரசுக்கு சுனில் வியூகம் வகுக்கிறார் என்பதை கேள்விப்பட்டமே, சற்று அதிர்ந்துதான் போனார் கேசிஆர்.. அதனால்தானோ என்னவோ, சுனிலுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.. அத்துடன் காவல்துறை நடவடிக்கைக்கும் சுனில் ஆளாக நேர்ந்தது. அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.. சுனிலையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.. அலுவலக பொருட்களை போலீசார் அள்ளிக் கொண்டு போனார்கள்.
ஆனாலும் சுனில் அசரவில்லை. மறுபடியும் புதிய ஆபீஸை அமைத்து, முன்பைவிட அதிக உறுதியுடன் காங்கிரஸின் வெற்றிக்காக களமிறங்கினார். ஆளும் பாரத் ராஷ்டிர சமிதியை கட்சியை தெலுங்கானாவிலிருந்தே அகற்ற வேண்டும் என்ற உறுதியையும் எடுத்தார். அதைத்தான் இப்போது செய்து முடித்துள்ளார் சுனில்.
பெருகும் நம்பிக்கை: தெலுங்கானாவில் இன்று கிடைத்துள்ள இந்த வெற்றியானது, சுனில் மீதான நம்பிக்கையை வரும் எம்பி தேர்தலின் எதிர்பார்ப்பை எகிற செய்து வருகிறது.
இத்தனைக்கும் இவரது முகம் பலரும் அறிந்ததில்லை.. தன்னை பற்றி, பொதுவெளியில் காட்டிக் கொள்ளாதவர்.. மீடியாக்களில் தன்னை பற்றி செய்தி வருவதைகூட பெரிதாக விரும்பாதவர்.. இவரது போட்டோக்கள்கூட அவ்வளவாக வெளியே வந்ததில்லை.. மீடியா வெளிச்சமே தன்மீது படாமல் ஒதுங்கியிருந்த நிலையில், இன்று ஒட்டுமொத்த மீடியாவையும் தன்னை பற்றியே பேசவைத்துவிட்டார் இந்த "சாணக்கியன்' சுனில்..!!












Click it and Unblock the Notifications