"முடிஞ்சதா".. 10 சீட்டா.. டிடிவி தினகரன் - பாமக - பாஜக - தேமுதிக - வாசன் - கிருஷ்ணசாமி: செம கணிப்பு

எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தினால், பெருத்த சரிவை எதிர்கொள்வார் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருங்கிணைந்த அதிமுக உருவானால், திமுகவுக்கு அது சிக்கல்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்..!!!

திராவிட கட்சிகளுடன் இணைந்துதான் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் என்பதை பாஜக அறியாமல் இல்லை.. அதனால்தான், ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கி வருகிறது.

அதற்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் குறுக்கே நிற்பதால், அதிமுக தலைமையிலான கூட்டணி? அல்லது பாஜக தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணியா? என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது..

 ஊதுகுழல்

ஊதுகுழல்

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் மணி, பாஜக கூட்டணி குறித்தும், திமுக உஷாராக வேண்டும் என்பது குறித்தும் சில கருத்துக்களை சொல்லி உள்ளார். ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் மணி சொன்னதாவது: "ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே இன்று வெளியேற்றும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார் என்றால் அதற்கு காரணமே பாஜகதான்.. பாஜகவின் பேச்சை கேட்டுக் கொண்டு ஓபிஎஸ் நடந்து கொள்வதையும், பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்டதையும், அதிமுகவின் சராசரி தொண்டர்களே விரும்பவில்லை..

 10+ சீட்

10+ சீட்

இதை புரிந்து கொண்டதால்தான், எடப்பாடி பழனிசாமி அவருக்கு கட்டம் கட்டினார்.. தற்போது அதிமுக என்ற கட்சியும் பிரதானமாக எடப்பாடியிடம் உள்ளதால், அரசியல் ரீதியாகவும் எதுவும் ஓபிஎஸ்ஸால் செய்ய முடியவில்லை.. அதனால், எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டுவருவதற்காக, மத்திய புலனாய்வு அமைப்புகளை மெல்ல மெல்ல மோடி அரசு ஏவி விட்டுக் கொண்டிருக்கிறது.. பலவீனமான அதிமுக தேவை + இரட்டை தலைமையும் தேவை + 10 சீட்டுக்களுக்கு மிகாமல் தேவை என்று நினைக்கிறது.. இந்த 10 சீட்டில் 5 சீட்டுக்களையாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

ஆனால், ஓபிஎஸ் + எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒருங்கிணைந்து, கூட்டணியில் டிடிவி தினகரன் + டாக்டர் கிருஷ்ணசாமி+ பாஜக + பாமக + வாசன் + தேமுதிக இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தால், 2024 தேர்தலில், மிகப்பெரிய வலிமை வாய்ந்த கூட்டணியாக இருப்பார்கள்.. இந்த லிஸ்ட்டில் கமலும் சேருவார் என்கிறார்கள்.. இந்த கூட்டணி திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும்.. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், 10 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.... அமமுக + ஓபிஎஸ் இவர்களை எல்லாம் மட்டுமே நம்பி பாஜக தேர்தலை சந்தித்தால் சறுக்கலாகிவிடும்.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

எனினும், இவையெல்லாம் நடந்துவிடும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், இந்த வியூகம் நடக்காது என்பதை யாராலும் இங்கே உறுதியாக சொல்ல முடியாது.. காரணம், அரசியலில் எதையுமே கற்பனையே பண்ண முடியாத நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்துவிடும்.. எந்த ஒரு அரசுமே நாள் ஆக ஆக மக்களின் செல்வாக்கை இழந்துவிடுவது இயல்பான விஷயம்.. இப்போது திமுக அரசு மீது அதிருப்தியும் வளர்ந்து வருகிறது.. எனவே, ஒருங்கிணைந்த அதிமுக உருவானால், திமுக + விசிக + இடதுசாரி கூட்டணி வெல்வது கடினம்தான்.. எப்போதுமே ஒருங்கிணைந்த அதிமுக என்பது திமுகவுக்கு ஆபத்துதான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+