சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சந்தேகப்படாதீங்க".. 25 எம்எல்ஏக்களா?.. அதிரும் எடப்பாடி டீம்.. அதென்ன "ஆபரேஷன் சி".. ப்ளான் இதான்

நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க சசிகலா செங்கல்பட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக விவகாரம் முடிவுக்கு வராத சூழலில், சசிகலாவின் அரசியல் என்ன ஆனதோ என்றே தெரியாத நிலையில், தற்போது அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுப்பாக்கியும் வருகிறது.

அதிமுக விவகாரங்கள் உச்சத்துக்கு போய்விட்ட நிலையில், இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.. ஒன்றுபட்ட அதிமுகவுக்கு பாஜகவும் மறைமுகமான அழுத்தத்தை தந்து வருகிறது.

ஓபிஎஸ் + எடப்பாடி + பாஜக என எல்லாருமே கோர்ட் முடிவைதான் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் சசிகலா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

 திருமகன் ஈவெரா மறைவு- இரங்கலில் சசிகலா குறிப்பிட்ட அந்த ஒரு முக்கியமான பெயர்-ஓபிஎஸ், இபிஎஸ் சொல்லலை! திருமகன் ஈவெரா மறைவு- இரங்கலில் சசிகலா குறிப்பிட்ட அந்த ஒரு முக்கியமான பெயர்-ஓபிஎஸ், இபிஎஸ் சொல்லலை!

 25 எம்எல்ஏக்களா

25 எம்எல்ஏக்களா

சில தினங்களுக்கு முன்பு, சசிகலா குறித்த தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்தது.. முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம் விகே சசிகலா... வாரத்துக்கு இருமுறை சசிகலாவிடம் பேசும் ஓபிஎஸ், அதை நிறுத்தி விட்ட நிலையில், கடந்த பல வாரங்களாகவே அவர் சசிகலாவிடம் பேசவில்லையாம். அதேபோல, வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்ததோரும் சசிகலாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவரது சகோதரர் திவாகரன் மட்டும் அரசியல் அப்-டேட்டுகள் குறித்து சசிகலாவிடம் குறித்து விவாதிக்கிறாராம்..

 30 MLAs

30 MLAs

மேலும், அதிமுகவிலிருந்து 30 எம்எல்ஏக்கள் சசிகலா பக்கம் வர ஆர்வமாக இருப்பதாகவும், பொருளாதாரம் சார்ந்த சில எதிர்பார்ப்புகள் அவர்களிடம் இருப்பதால், அதை சரி செய்தால் உடனே சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்றும், திவாகரன் சசிகலாவிடமே சொன்னாராம்.. "சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளதால், அதில் சிலவற்றை விற்றுவிடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சசிகலாவும் திவாகரனிடம் பதில் சொல்லி உள்ளதாக தெரிகிறது.. இதைதவிர, அமித்ஷாவை சந்திக்க நடிகை விஜயசாந்தி மூலம் மீண்டும் முயற்சிகளையும் சசிகலா மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 ஸ்ட்டிரைட் டீலிங்

ஸ்ட்டிரைட் டீலிங்

இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலா தொண்டர்களை சந்திக்க கிளம்பிவிட்டார்.. இந்த முறை செங்கல்பட்டை நோக்கி பயணத்தை துவக்குகிறார்.. 2 மாதங்களுக்கு முன்பு, வட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் பணிகளை சசிகலா ஆரம்பித்தார்.. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் குறிப்பாக, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக கைத்தறி பிரிவு தலைவர் பாலன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலர் சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி பூபாலன். மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பொன்னுசாமி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேசினர்..

 சந்தேகப்படாதீங்க

சந்தேகப்படாதீங்க

சசிகலா வீட்டிலேயே இந்த சந்திப்பு அப்போது நடந்தது.. அவர்களிடம் சசிகலா, "கட்சி நமக்கு கிடைக்குமா என்று சந்தேகப்படாதீங்க... கூடிய சீக்கிரம் அதிமுக முழுமையாக நம்மிடம் வரும். மறுபடியும் ஆட்சியைப் பிடிப்போம்" என்று நம்பிக்கை தந்திருந்ததுடன், யார் யார் தன்னை வந்து சந்தித்து பேசினார்கள் என்பதை அறிக்கை மூலமாகவும் சசிகலா அப்போது வெளியிட்டிருந்தார்... ஏற்கனவே திமுகவை சமாளிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு திணறி வரும் நிலையில், சசிகலாவின் ஒவ்வொரு நகர்வுகளும் உள்ளுக்குள் கலங்கடிப்பதாகவே அமைந்து வருகிறதாம்..

 பஸ் ஸ்டாண்டிலேயே

பஸ் ஸ்டாண்டிலேயே

கடந்த மாதங்களில், போனில் மட்டுமே சசிகலா பேசி வந்த நிலையில், நேரடியாகவே அதிமுக நிர்வாகிகளிடம் பேச துவங்கி உள்ள நிலையில், அதற்கான பயணமும் துவங்கி உள்ளது.. வரும் 9ம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து கிளம்பி கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கம் செல்கிறார் சசிகலா.. பிறகு அங்கிருந்து மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சசிகலாவை வரவேற்க, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக முக்கிய இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 தடுமாறுகிறதோ

தடுமாறுகிறதோ

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "இன்றைய சூழலில் பாஜக உட்பட அனைத்து கட்சிகளுமே பலவீனமாகி வருகின்றன.. கட்சிகளின் செல்வாக்கும் சரிந்து கொண்டு போகிறது.. தேர்தல்களும் அடுத்தடுத்து வர உள்ளது.. இதனால் திமுக பக்கம் சென்றால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து, மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் தாவக்கூடும்.. எனவே, சசிகலா நினைத்தால், அதிமுகவை இழுத்து பிடித்து அரவணைத்து கொண்டு செல்ல ஓரளவு முடியும், ஆனால் அதற்கும் காலஅவகாசம் தேவைப்படும்.. எப்படி பார்த்தாலும் திமுகவின் அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆளாகி உள்ளன" என்றனர்.

English summary
Success strategy by VK Sasikala and Tour in chengalpattu district on the 9th to meet the volunteers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X