Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாடி எங்களுக்கு வேணும்! எம்பி கனவில் வலம் வரும் அதிமுக ‘வாரிசுகள்’! அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலை குறிவைத்து பணியாற்றி வரும் நிலையில், அவர் தரப்பில் இருக்கும் சில மூத்த முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் எம்பி பதவியை குறிவைத்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தீவிர அரசியலில் இல்லாமல் புது முகமாக கட்சிக்குள் வந்தவுடன் எம்பி பதவி கேட்கும் மாஜிக்களின் வாரிசுகளும் இந்த பட்டியலில் உள்ளனர்.

சட்டசபை தேர்தல் தோல்வி, ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் படுதோல்வி, தற்போது அதிமுக அதிகார யுத்தம் என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருகிறது அதிமுக. இதனால் அமைப்பு அளவில் பலவீனமாக இருக்கிறது.

இதையடுத்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள வருகின்ற மக்களவைத் தேர்தலை நம்பி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் தேர்தலை சந்தித்து ஓரளவு வெற்றி பெற்று விட்டாலே போதும் கட்சியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டு விடலாம் என கணக்கு போட்டுள்ளார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். மேலும் அந்த பயணத்தின் போதே எம்பி வேட்பாளர்களை குறித்து கணக்கெடுக்கவும் இருக்கிறார். ஜெயலலிதா இருந்த போது யார் வேட்பாளராக வருவார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருந்தபோது அறிவிப்பு வெளியாகும் முன்னரே வேட்பாளர்கள் யார் என்பதை ஓரளவு கணிக்க முடிந்தது.

வாரிசுகள் மோதல்

வாரிசுகள் மோதல்

இந்நிலையில் ஏற்கனவே பதவியை பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் எம்பி தேர்தலில் போட்டியிட முயற்சித்து வரும் நிலையில், மாஜிக்களின் வாரிசுகளும் எம்பி கோதாவில் களமிறங்க தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களும் வாரிசுகளை களமிறக்க தயாராகி வருகின்றனர். சென்னையில் இருந்து மதுரை வரை ஏற்கனவே களம் கண்ட வாரிசுகள், களம் காண தயாராகி வரும் அதிமுக தலைகளின் வாரிசுகள் யார் என பார்க்கலாம்.

ஜெயக்குமார் - ஜெயவர்தன்

ஜெயக்குமார் - ஜெயவர்தன்

இந்த பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ஜெயக்குமார் தான். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, மாநிலங்களவை எம்பி வாய்ப்பு பறிபோனது என அரசு பதவி இல்லாமல் இருக்கும் அவரும், அவரது மகனுமே எம்பி போட்டியில் இருக்கிறார். ஏற்கனவே எம்பியாக இருந்து பின்னர் தோல்வியை சந்தித்த அவரது மகனான ஜெயவர்த்தன் மீண்டும் எம்பி கனவில் இருக்கிறார். இது தொடர்பாக தனது தந்தையிடமும் தலைமையிடமும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உரிய அரசுப் பதவியில் இல்லாமல் இருக்கும் ஜெயக்குமாரும் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பார் என்பதால் ஜெயவர்த்தனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கின்றனர் அதிமுகவினர். ஜெயக்குமார் அல்லது அவரது மகன் ஜெயவர்த்தன் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் எம்பி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம். இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் வட சென்னை அதிமுகவினர்.

மதுரை மோதல்

மதுரை மோதல்

சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக மாவட்டம் என்றால் அது மதுரை. அதிமுகவின் ஒவ்வொரு நிகழ்வும் மதுரை அரசியலை மையமாக வைத்தே இருக்கிறது. அந்த வகையில் மதுரையில் மூன்று அதிமுக புள்ளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தாலும் கட்சி என்று வந்துவிட்டால் ஒன்றாகவே பயணிக்கின்றனர். தற்போது மூவரும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் நிலையில் அவர்களது வாரிசுகளும் எம்பி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு மருமகள்களை மதுரை மேயராக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர்களை மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிட வைக்கலாமா என ஆலோசித்து வருகிறார்.

ஆர்பி உதயகுமார் - ராஜன் செல்லப்பா

ஆர்பி உதயகுமார் - ராஜன் செல்லப்பா

மதுரை அரசியலில் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைகுரிய நபர்களில் ஒருவரான ஆர்பி உதயகுமாருக்கும் தனது மகளை எம்பியாக்கும் ஆசை இருக்கிறது என்கின்றனர் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள். தற்போது அவரது மகள் மேற்படிப்பு படித்து வரும் நிலையில் அம்மா பவுண்டேஷன் மூலம் 150 நாட்களுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்தி வந்தார். மேலும் இளைஞர் இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினராகவும் அதிமுக உறுப்பினராகவும் இருக்கும் அவரது மகளை போட்டியிட வைக்கலாமா என தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்கான வாய்ப்புகளும் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவெடுப்பார் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முற்றும் மோதல்

முற்றும் மோதல்

மதுரை அரசியலைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த நபர்களில் மற்றொருவரான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியனும் எம்பி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது மீண்டும் களமிறங்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் திரை மறைவில் நடைபெற்று வருகிறது. மதுரையில் இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளை பகிர்ந்து அளிப்பதில் மூவரது தலையீடும் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்தது இரண்டு வாரிசுகளாவது தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கின்றனர் மதுரை அதிமுகவினர்.

திண்டுக்கல் உள்குத்து

திண்டுக்கல் உள்குத்து

அடுத்ததாக திண்டுக்கல்லில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் இடையே எம்பி தேர்தலில் கடும் போட்டி நிலவியது. அப்போது உட்கட்சி உள்குத்துகளை சமாளிக்க பாமக விட திண்டுக்கல் தொகுதி தள்ளிவிடப்பட்டது. அதற்கு முன்னர் அதிமுக பல தேர்தல்களில் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக படுதோல்வியை சந்தித்தது. திமுக வேட்பாளரான வேலுச்சாமி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரு வெற்றி பெற்றார். இதனை திமுகவே எதிர்பார்க்கவில்லை. இதற்கு அதிமுகவின் உள்குத்து அரசியல் தான் காரணம் என பாமக புலம்பியது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் வாரிசான ஆர்வியின் கண்ணன் அல்லது தனது வாரிசான அமர்நாத் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக களம் இறக்கும் முனைப்பில் இருக்கிறார் நத்தம் விஸ்வநாதன்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்


இதே போல திண்டுக்கல்லில் மற்றொரு மாஜி அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனும் தனது வாரிசுகளில் யாராவது ஒருவரை எம்பி ஆக்க நினைக்கிறார். ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சி வார்டு உறுப்பினராக இருக்கும் மகன் ராஜ்மோகன் அல்லது சென்னையில் முக்கிய பணிகளை கவனித்து வரும் சதீஷ்குமார் ஆகியோரில் யாராவது ஒருவர் எம்பி தேர்தலில் திண்டுக்கல்லில் களம் இறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இதனால் மதுரையைப் போலவே திண்டுக்கல்லிலும் நிச்சயம் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கோவை கரூர் கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் வாரிசுகளை களம் இறங்க வாய்ப்பிருப்பதால் அதிமுக எம்பி வேட்பாளர்கள் தொடர்பான பட்டியல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+