அதிமுக அன்றே செய்த சம்பவம்.. பின்னாடியே வந்த பிஜேபி.. வீடியோ போட்டு தெறிக்கவிட்ட பிடிஆர்
சென்னை: நாடாளுமன்றத்திற்கு வராதவர்களையே அவைக்கு குந்தகம் விளைவித்ததாக தவறுதலாக சஸ்பெண்ட் செய்துள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா.. இதேபோல் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தனபால் சபாநாயகராக இருந்த போது சட்டசபையில் நடந்துள்ளது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய வீடியோ ஒன்று இப்போது வேகமாக பரவி வருகிறது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும் பாதுகாப்பு மீறல் நடந்தது. இதுபற்றி நேற்று விவாதம் நடத்தும்படியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கூறி லோக்சபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்த விவகராத்தில் கனிமொழி,ஜோதி, மாணிக் தாகூர், வெங்கடேசன் உள்பட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் ராஜ்யசபாவில் இருந்தும் ஒரு எம்பி சபை நடவடிக்கைகளை சீர்குலைத்த கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் அவையில் இல்லாததால் அவரது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதாகக் கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெற அரசு முடிவு செய்தது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை நேற்று மாலையே 14 ஆக குறைந்தது.
இதனிடையே நாடாளுமன்றத்திற்கு வராதவர்களையே அவைக்கு குந்தகம் விளைவித்தததாக தவறுதலாக சஸ்பெண்ட் செய்த சம்பவத்தை போன்று தமிழகத்தில் 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தனபால் சபாநாயகராக இருந்த போது நடந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த நிலையில், சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக 80 திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்றைக்கு சபாநாயகராக இருந்த தனபால் சஸ்பெண்ட் செய்தார். இதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்பட 2 பேர் அவைக்கே வராத நிலையில் அவரும் தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதபற்றி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியாவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால் நான் நூலகத்தில் இருந்ததால், என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை... சட்டசபை கூடி 10 நாட்கள் ஆகி இருந்தது. 5 நாட்கள் கவர்னர் உரை இருந்தது. 5 நாட்கள் பட்ஜெட்டுக்கும் நடந்திருந்தது. அதற்குள் பெரிய பிரச்சனையாக்கி எல்லாரையும் வெளியேற்ற வேண்டும் என்று சொல்லி, அதற்கு பிறகு கூண்டோடு எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ணுகிறோம் என்று சொல்லி, அவையில் இல்லாத என்னை எல்லாம் சேர்த்து வைத்து சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்.
Yes, indeed it is… https://t.co/pt5ULa6bvc
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) December 15, 2023
நான் நூலகத்தில் இருக்கிறேன். கேமராவில் தெரிகிறது. அதற்குமேல் கிண்டல் சொல்கிறேன். போளூர் எம்எல்ஏ கேவி சேகர் , எம்எல்ஏ கிரியையும் சேர்த்து வைத்து சஸ்பெண்ட் செய்து விட்டார்கள்... கேவி சேகர் ஊரிலேயே இல்லை.. அவரை சஸ்பெண்ட் செய்தார்கள். இதேபோல் கிரி வந்துவிட்டு வேறு ஏதோ விருந்துக்கு போய்விட்டார். அவரையும் சேர்த்து வைத்து சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்.. என்ன காரணம் சொன்னார்கள் என்றால், எல்லாருமே அவையின் மரபை மீறினார்கள் என்று கூறி சஸ்பெண்ட் செய்தார்கள்.
அவையில் இல்லாதவர்களை அவையில் மரபு மீறியதாக கூண்டோடு சஸ்பெண்ட் செய்தார்கள். நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.. சிசிடிவி காட்சி இருந்தது. அந்த வழக்கில் அவர்கள் தோற்றும் நிலை இருந்தது. அந்த வழக்கு ஐந்து வருடங்களாக நிலுவையில் இருந்தது" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications