செங்கோட்டையனே நொந்து போயிட்டாரோ.. திடீர் திடீர்னு ரத்தாகும் விஜய் பயணங்கள்.. தள்ளாடுதா தவெக.?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 திராவிடக் கட்சிகளுக்கும் நான்தான் மாற்று என்று முழக்கமிட்டு தேர்தல் அரசியலுக்கு வந்த தவெக தலைவர் நடிகர் விஜய், தற்போது திட்டமிட்டபடி பிரச்சாரத்திற்கு கிளம்ப முடியாமல் தவித்தபடி இருக்கிறாராம்.. இதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்திதான் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
விரைவில் தேர்தல் வருகிறது.. நாட்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.. இந்நிலையில் தவெகவில் சில எதிர்பாராத குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தவெக விஜய்
திட்டமிட்டபடி பிரச்சாரத்திற்கு கிளம்ப முடியாமல் தவித்தபடி இருக்கிறாராம் விஜய்.. அதுமட்டுமல்ல அறிவிக்கப்படும் பிரச்சாரத் திட்டங்களும் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவதால் என்ன செய்வதென தெரியாமல் விஜய் குழம்பிப் போயிருப்பதாக தவெக தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.
விஜய்யின் இந்தத் தேக்க நிலைக்குக் காரணமாக பல அடுக்குகளாக சிக்கல்கள் நீடிக்கின்றன. முதலில் கரூர் உயிர்பலி சம்பவத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் எந்த ஒரு சீரியஸ் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் விஜய் முடங்கிக் கிடந்தார்.
அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்ப முயன்றபோதுதான், "ஜனநாயகன்" படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்ட சூழல் உருவானது. அதே நேரத்தில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகிய சம்பவம் என அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட தனிப்பட்ட பிரச்சனைகளால் விஜய் மீண்டும் முடங்கிப்போனார்.
சொதப்பலாகும் பிளான்
இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, தேர்தல் பணிகள் குறித்து ஆழ்ந்த விவாதங்களை நடத்த முடியாமலும், வேட்பாளர்களை நேரடியாகத் தேர்வு செய்வதில் எதிர்மறை விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார்.
மனுத்தாக்கல் தொடங்கும் தேதி வந்துவிட்டதால், அவசரம் அவசரமாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பெரம்பூர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தைத் துவங்கினார் விஜய். அங்கிருந்து அப்படியே கொளத்தூரிலும் வில்லிவாக்கத்திலும் பிரச்சாரத்தைத் தொடர்வது எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொளத்தூருக்குள் நுழைந்தவர் முழுமையாகப் பிரச்சாரம் செய்ய முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பினார். இதனால் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
நொந்து போன செங்கோட்டையன்?
இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்குப் பிரச்சாரப் பயணத்திட்டத்தை வகுப்பதில் யாரும் அக்கறை காட்டாததே காரணம் எனச் சொல்லப்படுகிறது. பிரச்சாரப் பயணத்திட்டம் வகுப்பதில் வல்லவர் எனச் சொல்லப்படும் சீனியர் அரசியல்வாதி செங்கோட்டையன் கட்சியில் இருந்தும், அவரால் பயணத்தை நெறிப்படுத்த முடியவில்லையாம்..
இது குறித்து மூத்த தலைவர் செங்கோட்டையனிடம் தவெக நிர்வாகிகள் கேட்டபோது, ''என்னிடம் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. நான் எப்படி அதில் அக்கறைக் காட்ட முடியும்? இது குறித்து என்னிடம் விவாதிக்க வேண்டிய விஜய் கூட, விவாதிக்க நினைக்கவில்லை. நான் என்னப்பா பண்ண முடியும்?'' என்று மிகுந்த ஆதங்கத்தோடு சொன்னாரா.. அனுபவமிக்கவர்கள் ஓரங்கட்டப்படுவதால் தவெகவின் தேர்தல் களம் தள்ளாட்டத்திலேயே நீடிப்பதாக கூறுகிறார்கள்..!!
- எழில்
-
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
இன்னுமா என்னை யாருனு தெரியலை.. கோபியில் செங்கோட்டையன் பக்கா பிளான்.. எடப்பாடிக்கு செக் -
வில்லிவாக்கத்திலிருந்து.. தி.நகருக்கு 1 மணி நேரத்தில் போக முடியாதாம்! பரப்புரையை ரத்து செய்த விஜய்! -
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
வில்லிவாக்கம் பெரிய ஏரியா கிடையாது.. நாளைக்கு விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார்? பதறும் பெற்றோர்கள்! -
பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல -
“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
சீமானுக்கு இங்கு ஓட்டு இல்லை! காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது - கார்த்தி சிதம்பரம்












Click it and Unblock the Notifications