ஓஹோ.. இதுதான் காரணமா.. பிரதமர் மோடி இங்கே வர வாய்ப்பில்லையாமே.. நிசப்தத்தில் "விருதுநகர்"..!
பிரதமரின் தமிழகம் வருகை ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை குறித்தான, ஒரு முக்கியமான தகவல் அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..!
பிரதமர் மோடி எத்தனையோ முறை தமிழகம் வந்துள்ளார்.. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பிரதமரின் வருகை இந்த முறை பேசப்பட்டு வருகிறது.. காரணம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது..!
வருகிற ஜனவரி 7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் 'நம்ம ஊரு பொங்கல்' கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜனவரி 12-ல் நடைபெறுகிறது... இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று முன்னதாக தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

மதுரை
அதேபோல, தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை, விருதுநகரில் ஜனவரி 12-ல் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துமிருந்தது.. அரசு நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை மண்டேலா நகரில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் மோடி பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது...

எய்ம்ஸ்
இதற்காக மதுரையே தயாராகி கொண்டிருக்கிறது.. எப்படியும் பிரதமர் வந்ததும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் குறித்த விவகாரத்துக்கு ஒரு முடிவு எட்டப்படும் என்று அம்மாவட்ட மக்கள் காத்து கொண்டுள்ளனர்.. அதேபோல, விருதுநகரும் பிரதமரின் வருகையை எதிர்நோக்கி கொண்டே இருக்கிறது.. காரணம், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிறகு 2வது பிரதமராக விருதுநகருக்கு பிரதமர் வர உள்ளதுதான்.. அப்படி விருதுநகர் வரும்போது, சிவகாசி பட்டாசு பிரச்சினை, காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளை தொடகுவது, வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட விவகாரங்களுடன் விருதுநகர் காத்து கொண்டுள்ளது.

தமிழகம்
அதுபோலவே புதுச்சேரியும் பிரதமரின் வருகைக்காக காத்து கொண்டுள்ளது.. ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளும் தவிடுபொடியாகிவிடும் என்றே தெரிகிறது.. காரணம், பிரதமரின் தமிழகம் வருகை ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அண்ணாமலை
செய்தியாளர்களிடம் பேசியபோது அண்ணாமலை இவ்வாறு கூறினார்.. ஆனால், அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்த கேள்விக்கு, "அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து மாநில அரசுதான் கூற வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்.. எனவே, பிரதமர் மோடியின் வருகை உறுதியாகிறதா? அல்லது ரத்தாகிறதா என்ற குழப்பம் நீடிக்கிறது.. அநேகமாக தமிழக பயணம் ரத்தாகும் என்றே சொல்கிறார்கள்..

பாதுகாப்புகள்
காரணம், பொதுவாக பிரதமரின் பயணம் உறுதி செய்யப்பட்டு விட்டால் சம்மந்தப்பட மாவட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, பிரதமரின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 5 நாட்களுக்கு முன்பே சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு விசிட் அடித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள்.. அதிலும், 3 நாட்களுக்கு முன்பேயே மொத்த ஏரியாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்..

வாய்ப்பு?
ஆனால், அது குறித்த பரபரப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது... கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதை காரணம் காட்டி மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவை பிரதமர் மோடி ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக தமிழக பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள்.. 'பிரதமரின் வருகை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை'' என்று புதுச்சேரி கலெக்டர் வல்லவனும் விளக்கம் அளித்துள்ளார்.. எதுவானாலும் இன்று அல்லது நாளை பிரதமரின் பயணம் குறித்து ஒருமுடிவு தெரிந்துவிடும்..!












Click it and Unblock the Notifications