பயபக்தியுடன் ஆன்மீகத்தில் திடீர் நாட்டம்! கணவருடன் கோயில் கோயிலாக வலம் வரும் நடிகை நமீதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைமை செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா ஆன்மீகத்தில் திடீர் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளார்.

குறிப்பாக தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு விசிட் அடித்து வருகிறார்.

அண்மையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 1,008 தாமரைப்பூக்கள் அபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்திய நடிகை நமீதா, நேற்று சேலம் அருகே உள்ள முத்துமலை முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.

Sudden pursuit of spirituality with reverence! Actress Namitha, who is crawling around the temples with her husband!

சேலம் மாவட்டம் ஏத்தாபூர் அருகே 146 அடி உயரம் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை உள்ளது. முத்துமலை முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் இந்தக் கோயிலுக்கு சென்ற பாஜக தலைமை செயற்குழு உறுப்பினர் நமீதா, அங்கிருந்த முருகன் வேல் மீது குடம் குடமாக பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்தார்.

பாஜகவில் முக்கியப் பதவியை எதிர்பார்த்து நடிகை நமிதா கோயில் கோயிலாக வேண்டுதல் வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை செய்த போது அங்கிருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் அவர் விசிட் அடித்திருக்கிறார். பாஜகவில் இணைந்த பிறகே நமீதா ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மானாட மயிலாட டான்ஸ் ஷோவில் நடுவராக அமர்ந்து மச்சான்ஸ் மச்சான்ஸ் என கொஞ்சுத் தமிழில் பேசிய நமீதாவா இப்படி பயபக்தியாக மாறிவிட்டார் என அவரது ரசிகர்களே ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+