சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் பிற்பகலுக்கு பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.

சென்னையில் பலத்த மழை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், வடபழனி, கேகேநகர், ஈக்காட்டுத்தாங்கள், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

பல இடங்களில் கனமழை
இதேபோல் புறநகர் பகுதியான மீனம்பாக்கம், பம்மல், தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூரிலும் மழை பெய்து வருகிறது.

கொட்டி தீர்க்கும் மழை
பூவிருந்தவல்லி, அம்பத்தூர், வானகரம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
|
மக்கள் மகிழ்ச்சி
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை நீடித்தது. திடீர் கன மழையால் சென்னை சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வெளுத்து வாங்கிய இந்த திடீர் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications