வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில் சந்தேகம் உள்ளது என அதிமுக ஆட்சேபித்து சிபிஐ விசாரணை கோரிய நிலையில் அவரது மரணத்தில் இதுவரை எந்த சந்தேகமும் இல்லை, லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பவில்லை, மிரட்டல் எதுவும் இல்லை என காவல் ஆணையர் ஜிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும் ஐஎஃப் எஸ் அதிகாரியுமான வெங்கடாச்சலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் சிக்கினார். இதில் பணம், நகைகள் சிக்கியது. வெங்கடாச்சலத்திற்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். மகன் தனியாக பிரிந்துச் சென்று வசிக்கிறார். மகள் வெளிநாட்டில் உள்ளார். மனைவியுடன் வசித்து வந்த வெங்கடாச்சலத்துக்கும் மனைவிக்கும் ரெய்டு விவகாரத்துக்குப் பின் அவ்வப்போது சிறு சச்சரவுகள் தோன்றியதாக கூறப்படுகிறது.

அதிமுக சிபிஐ விசாரணை கோரி புகார்
ரெய்டுக்குப்பின் ஏற்பட்ட அவமானம், சொந்தங்களினால் ஏற்பட்ட மன உளைச்சல் வாட்டி வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் வெங்கடாச்சலம். அவரது மரணத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நெருக்கடியே காரணம், அவரைபோன்ற அதிகாரிகளுக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது. வெங்கடாச்சலம் மரணத்தை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்திருந்தார்.

காவல் ஆணையர் மறுப்பு
வெங்கடாச்சலம் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மிரட்டப்பட்டாரா என்பதை அறிய அவரது செல்போனை சைபர் பிரிவு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் " மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை மரணம் 2 ஆம் தேதி நடந்துள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு மேல் உணவருந்தியுள்ளார். வெளியில் வராததால் 3 மணிக்கு அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். கதவை திறக்காததால் ஆட்களை வரவழைத்து 4 மணிக்கு கதவை உடைத்து உள்ளேச்சென்று பார்த்தபோது உள்ளே தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

சந்தேக மரணமாக வழக்குப்பதிவு
174 சிஆர்பிசி கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை கிடைத்த வாக்குமூலப்படி அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. கைப்பற்றப்பட்ட அவரது செல்போன் , டேப் தொடர்பாக தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். உடற் கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு தேவைப்பட்டால் கூடுதலாக சட்டப் பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் மிரட்டவில்லை
விசாரணையில் கிடைக்கும் தகவலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மிரட்டவில்லை விஜிலென்ஸ் சார்பாக வெங்கடாசலத்திற்கு சம்மன் அனுப்பியதாக எங்களது தரப்பில் எந்த தகவலும் இல்லை. அவருக்கு சம்மன் அனுப்பியதாக எந்த தகவலும் இல்லை. எப்போது விசாரணைக்கு வர முடியும் என்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் பேசியுள்ளனர் என்றே தெரியவந்துள்ளது.

மனைவியின் புகார் பதிவு
மிரட்டல் என்று எந்த தகவலும் இல்லை. அவர் மனைவி புகார் அளித்துள்ளார், அதை அவர் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்துள்ளோம். அதில் அவர் சந்தேகம் இருக்கிறது என்று எதுவும் புகார் அளிக்கவில்லை". என்று தெரிவித்திருந்தார்.

சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
வெங்கடாச்சலம் சமூகத்தின் உயர் மட்டத்தில் இருந்த அதிகாரி, லஞ்ச ஒழிப்பு விசாரணையில் சிக்கினார், அதையே காரணம் காட்டி மிரட்டப்பட்டதால் வெங்கடாச்சலம் தற்கொலை என அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிபிஐ விசாரணை கோரிய நிலையில் தற்போது விசாரணை சென்னை காவல்துறையினரிடமிருந்து சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications