கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா? ரேசன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்! அரிசி கார்டுகளாகும் சர்க்கரை கார்டு
சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், குறிப்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற உதவிகள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், சக்கரை அட்டை வைத்துள்ளவர்கள் இந்த சலுகைகளைப் பெற முடியாமல் தவிப்பது தொடர்கிறது. இதன் காரணமாக, சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாகக் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேசன் கார்டு
மாநிலம் முழுவதும் மொத்தம் 2 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 2.23 கோடி அட்டைகள் அரிசி அட்டைகளாக உள்ளன. இந்த அரிசி அட்டைகள் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, சுமார் 5 முதல் 6 லட்சம் குடும்ப அட்டைகள் சக்கரை அட்டையாகவும், சில அட்டைகள் எந்தப் பொருட்களும் வாங்கப்படாத நிலையில் உள்ளவையாகவும் இருக்கின்றன.
சக்கரை அட்டை
அரிசி அட்டைக்கு அரசின் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தாண்டு வழங்கப்பட்ட 3,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, சக்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், ஏற்கனவே சக்கரை அட்டை வைத்திருக்கும் பலரும், தங்களை அரிசி அட்டைக்கு மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால், நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அட்டை மாற்றம் செய்ய முடியாத நிலை நீடித்து வருவதால், அரசு தனியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றம்
இந்த சூழ்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் இந்த விவகாரத்தை முன்வைத்தார். தகுதி உள்ளவர்களின் குடும்ப அட்டைகளை சக்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டையாக மாற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சக்கரபாணி
இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்தாண்டு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த உதவி கிடைக்காததன் காரணமாகவே அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறினார். மேலும், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், தகுதி இருப்பின் சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார். இதன் மூலம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகள் ஆவதோடு, அரசின் நலத்திட்டங்கள் பலவும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications