கோரிக்கையை ஏற்றார் ஸ்டாலின்.. பொங்கல் பரிசுடன் கரும்பு! விவசாயிகளுக்கு முதல்வர் இனிப்பு அறிவிப்பு
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பரிசு தொகுப்புடன், கரும்பு, வெல்லம், முந்திரி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக அரசு நல்ல விலைக்கு அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் அதனை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் பண்டிகையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் வழங்க கேட்டு டிசம்பர் 24ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசரணையை ஜனவரி 2ஆம் தேதிதிங்கள் கிழமை க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் செங்கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் ஜனவரி 9ஆம் தேதியன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என்றும் கூறினார். ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகை நாளில் இனிப்பான செய்தி கூறிய முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் நன்றி கூறி வருகின்றனர்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications