சுஜித் எப்படி இருக்கான்? நிலை என்ன? துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு போன் செய்த லதா ரஜினிகாந்த்!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமிடம் லதா ரஜினிகாந்த் போன் செய்து விசாரித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமிடம் லதா ரஜினிகாந்த் போன் செய்து விசாரித்து இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு ரிக் இயந்திரம் கொண்டு ஆழமாக சுரங்கம் தோண்டி, சுஜித்தை மீட்க ஓஎன்ஜிசி முயன்று வருகிறது. சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. 69 மணி நேரத்தை தாண்டி மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மீட்பு பணிகள் நடக்கும் பகுதிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அங்குதான் இரண்டு நாட்களாக இருக்கிறார். மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவில் இருந்து மீட்பு பணி நடக்கும் பகுதியில் இருக்கிறார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு, சில மணி நேரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் போன் செய்து பேசி இருக்கிறார்.
சிறுவன் சுஜித் எப்படி இருக்கிறான்? மீட்பு பணிகள் எப்படி சென்று கொண்டு இருக்கிறது என்று போன் செய்து விசாரித்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சுஜித் நிலை குறித்து தெரிந்து கொள்ள குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் சுஜித் மீட்பு பணிகள் நன்றாக நடக்கிறது. அரசையும் அதிகாரிகளையும் குறைய சொல்ல மாட்டேன். சுஜித் மீண்டு வர பிரார்த்திக்கிறேன், என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications