Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வமகள் சேமிப்பு திட்டம்! ரூ. 1 லட்சம் + 15 ஆண்டுகள் சேமித்தால்! 21 வயதில் எவ்வளவு லாபம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கவும், அவர்களின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிகச்சிறந்த சேமிப்புத் திட்டம் 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' (Sukanya Samriddhi Yojana - SSY). தமிழில் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' என்று அழைக்கப்படும் இத்திட்டம், தற்போதைய சூழலில் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த திட்டத்தில் 8.2 சதவீதம் என்ற மிக அதிக வட்டி கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள வேறு எந்த திட்டங்களுக்கும் இது போன்று அதிக வட்டி விகிதம் கிடைப்பதில்லை. இந்த திட்டம் முற்றிலும் வரி இல்லாத ஒன்று.

sukanya samriddhi yojana post office

இந்த திட்டத்தின் கிடைக்கும் வருமானத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் பெயரில் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்?

பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் இக்கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்க முடியும். (குறிப்பு: இரட்டை அல்லது மூன்று பெண் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தால், அதற்குரிய மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்து கூடுதல் கணக்குகளைத் தொடங்க விதிவிலக்கு உண்டு).

எங்கு தொடங்குவது?

உங்கள் அருகிலுள்ள அஞ்சலகம் (Post Office) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு நிதியாண்டில் வெறும் 250 ரூபாய் செலுத்தி இக்கணக்கைத் தொடங்கலாம். ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. மற்ற சிறு சேமிப்புத் திட்டங்களை விட இதுவே மிக அதிக வட்டியாகும். இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அரசால் மாற்றியமைக்கப்படலாம்.

கணக்குத் தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் வரை நீங்கள் பணம் செலுத்த வேண்டும். கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் இத்திட்டம் முதிர்வடையும்.

கல்விக்காகப் பணம் எடுத்தல்: பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, உயர்கல்வி செலவிற்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

18 வயது பூர்த்தியான பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யத் திட்டமிட்டால், முதிர்வுக் காலத்திற்கு முன்பே கணக்கை முடித்து முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு உண்டு. இதற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது. முதிர்வு காலத்தின் போது கிடைக்கும் முழுத் தொகைக்கும் (அசல் + வட்டி) வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

உதாரணம் உங்கள் மகளுக்கு தற்போது 1 வயது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இன்று ஒரு கணக்கைத் தொடங்கி, ஆண்டுக்கு ரூ. 1,00,000 (மாதம் சுமார் ரூ. 8,334) வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில்:

உங்கள் மொத்த முதலீடு: ரூ. 15,00,000.

8.2% வட்டி விகிதத்தின்படி (மாறாமல் இருக்கும் பட்சத்தில்), 21-வது ஆண்டில் உங்கள் மகளின் கையில் கிடைக்கும் மொத்தத் தொகை: ரூ. 46,18,385.

இந்த கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்

பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்று (ஆதார், பான் கார்டு போன்றவை).

இருப்பிடச் சான்று.

புகைப்படங்கள்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+