செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.. "இவர்களின்" கணக்கு மூடப்படும்! சுகன்யா சம்ரிதி யோஜனா அதிரடி
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால், பயனாளரின் கணக்குகள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் துவங்கப்பட்டதாகும்.

தகுதிகள்: பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்று சொல்லக்கூடிய செல்வமகள் சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இதுவாகும். குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம். 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு இந்த திட்டம் முதிர்ச்சியடைந்துவிடும்.. 18 வயதை எட்டியதுமே, அவர்களின் கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
2 பெண் குழந்தைகள்: குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே சேரமுடியும். பெண் குழந்தையின் பெற்றோர் தவிர, சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம். இந்த திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதிப்பாதுகாப்பை இந்த திட்டம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், பல விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.. இதற்காக பொருளாதார அமைச்சகத்தால் புதிய வழிகாட்டுதல்களும் கொண்டுவரப்பட்டுள்ளன...
புதிய விதிமுறைகள்:
- நிதி அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, பெண் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டி தனது பேத்திக்காக செல்வ மகள் கணக்கைத் திறந்திருந்தால், அந்த கணக்குகள் பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும்.
- ஒருவேளை ஒரே விவரங்களுடன் 2 செல்வ மகள் திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், அது உடனடியாக மூடப்படும். அத்தகைய கணக்குகள் நெறிமுறையற்றதாகவும் கருதப்படும்.
- மகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும்.. அவர்கள் அவ்வாறு இணைக்காவிட்டால், அவர்களின் பான் மற்றும் ஆதார் எண்களை உடனடியாக எந்த தாமதமுமின்றி சேகரித்து கணக்கு விவரங்களில் இணைக்க தபால் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இந்த புதிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க தபால் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்த விதியின்படி, நெறிமுறையற்ற மற்றும் ஒழுங்கற்ற செல்வமகள் திட்ட கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரம் இனி நிதி அமைச்சகத்திடம் மட்டுமே இருக்கும். இதுபோன்ற சூழலில், அத்தகைய கணக்குகள் தங்கள் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு வரி சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.. இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி சலுகைகள் கிடைக்கும்.. இதில் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்குகளை பெற தகுதியுடையவையாகும்..
வருமான வரி: வருமானவரிச்சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் SSY கணக்கின் கீழ் திரட்டப்படும் வட்டிக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில், சுகன்யா சம்ரிதி யோஜனா, பிபிஎஃப் தவிர, குழந்தைகளின் பெயரில் தொடங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் கணக்கில் சாதாரண வட்டியைப் பெறுகின்றன..
அதேசமயம், சுகன்யா சம்ரிதி கணக்கு பெற்றோருக்குப் பதிலாக தாத்தா பாட்டிகளால் தொடங்கப்பட்டால் பாதுகாவலரை மாற்ற வேண்டும். இல்லையென்றால், அது சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்றப்படும். அதேபோல, ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால் அவற்றை மூட வேண்டும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications