மோசம் செய்யுமா மோச்சா? அதைவிடுங்க.. 4 நாட்களில் வானில் நடக்கும் அதிசயம் இதுதான்.. ஆய்வு மையம் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்திருந்தது. இந்நிலையில் மழை முடிந்துவிட்டது எனவும் இனி வெளியில் அதிக அளவில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயில் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் என்கிற அளவை தாண்டி பதிவாகியிருந்தது. அக்னி வெயில் தொடங்காததற்கு முன்னரே இவ்வளவு வெயில் வாட்டி எடுத்ததே அக்னி தொடங்கினால் வெயில் எப்படி இருக்கும் என்று பலருக்கும் அச்சம் ஏற்பட்டது. ஆனால் அக்னி வெயில் தொடங்கியபோது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் ஒரளவு ஆசுவாசமடைந்தனர். பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பின. இப்படி இருக்கையில் நேற்று முன்தினம் தொடங்கி வெயில் மீண்டும் பழைய மாதிரி வெளுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெளியில் அடுத்த நான்கு நாட்களில் 2-4 டிகிரி வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது,
"தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே) நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும்.
மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (11.05.2023) காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து 13.05.2023 முதல் சற்றே வலுக்குறைந்து 14.05.2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்த அளவில் இன்று (மே 10) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை முதல் அதாவது மே 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லேசான மழை இருக்கும். ஆனால் மே 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக 2-4 டிகிரி அதிகரிக்கும். குறிப்பாக 3-4ம் தேதி வரை 3-4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.
சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications