Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

Tamil Nadu School summer leave

ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டு இறுதியில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், 10ஆம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வுகள் தனித் தனியாக நடைபெற்று வருகின்றன.

பொதுத் தேர்வுகள்

இந்த கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து பிளஸ்-1 பொதுத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், தற்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. அதன்பின்னர், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவ மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

கோடை விடுமுறை

அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் முடிந்தவுடன், ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கும்.

கோடை விடுமுறை நீட்டிப்பு

இந்த ஆண்டு கோடை விடுமுறை சுமார் 48 நாட்கள் நீடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வெயில் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தல்

மேலும், இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் காலத்தில் பல பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பள்ளி வளாகங்கள் தேவையாக இருப்பதால், தேர்வுகளை விரைவாக முடித்து விடுமுறை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பு

தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீண்டகால கோடை விடுமுறை வழங்கப்படுவது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பெற்றோர் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு, கோடை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+