திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி முதல் முறையாக வீடியோ வெளியிட்டு ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். புதிய நீதி கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான உங்களுக்கு என் பணிவான வணக்கம்! இப்போது சமூகவலைதளத்திற்கு வந்துள்ளேன். இதுவரை சினிமாவில் ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக நிறைய படங்களில் உங்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறேன்.

இப்போது புதிய வாழ்க்கை ஒன்றை நான் ஆரம்பிக்கிறேன். முதல் முறையாக அரசியலுக்கு வந்துள்ளேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் வேட்பாளராக நிற்கிறேன். இதுவரை எனக்கு சினிமாவில் மிகப் பெரிய ஆதரவும் வாழ்க்கையும் அளித்த நீங்கள், எனது இந்த புதிய முயற்சிக்கும் ஆதரவாக நின்று என்னை வெற்றியடைய செய்வீர்கள் என மனமார நம்புகிறேன்.
என்றென்றைக்கும் உங்கள் ஆதரவை வேண்டி உங்கள் சுந்தர் சி என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமமுக, புரட்சி பாரதம், உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
அதில் அதிமுக 167 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 இடங்களிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 இடங்களிலும், ஐஜேகே இரு இடங்களிலும் புதிய நீதி கட்சி 2 இடங்களிலும் புரட்சி பாரதம் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
இதில் புதிய நீதி கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதி பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கிறது. எனவே ஒரு தொகுதியில் இரட்டை இலையிலும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
அதில் அதிமுக சார்பில் அக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை மத்தியில் இயக்குநர் சுந்தர்.சி.யை களமிறக்குவதாக சண்முகம் அறிவித்துள்ளார். சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மதுரை மத்திய தொகுதியின் எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மேலும் இந்த தொகுதி திமுகவின் கோட்டை என சொல்லலாம். இங்கு 6 முறை திமுக வென்றுள்ளது. ஒரு முறை அதிமுகவும், ஒரு முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவும் வென்றிருக்கிறது. இந்த தொகுதியில் சுந்தர் சி வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications