Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் கிளாஸ் டூ கூல் டிரிங்ஸ்! வெயிலின் போது காரில் இந்த பொருட்களை எல்லாம் வைக்காதீங்க.. பெரிய டேஞ்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் சில பொருட்களை காரில் வைக்கக் கூடாது. இதனால், நமது காரில் தீ விபத்து ஏற்படுவதோடு.. உடல்நலனுக்கும் கேடு ஏற்படுத்தலாம்.. எனவே காரை வெயிலில் நிறுத்தும் சூழல் வந்தால் காரில் வைத்து விட்டு செல்லக் கூடாதவை எந்த பொருட்கள் எல்லாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கி வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. வெயில் அனலாய் கொதிப்பதால் மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். கோடை காலத்தில் நமது உடலை பேணி காக்க குளிர்ச்சியான மற்றும் நீர்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு நமது உடலை பராமரிப்பது அவசியம்.

Sunglasses To Liquor Bottles Avoid these items Leave In Your Car In Summer

தீ பிடிக்க வாய்ப்பு: அதேபோல கார் வைத்திருப்பவர்கள் வெயில் காலத்தில் காரில் செல்லும் போது ஏசி போட்டுக்கொண்டு சென்றாலும், பகல் நேரத்தில் காரை நிறுத்தும் போது வெயிலில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் காருக்குள் அதிகப்படியான வெப்பம் இருக்கும். இந்த வெப்பத்தினால் சில சமயங்களில் கோடை காலத்தில் கார் தீ பிடிக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன.

வாகன ஓட்டிகள் அலட்சியமாக செய்யும் சின்னச்சின்ன விஷயங்கள்தான் இதற்கு காரணம் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கோடை காலத்தில் சில பொருட்களை காரில் வைத்திருப்பது ஆபத்தானது என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். அவை எந்தெந்த பொருட்கள் என்பது பற்றியும், அவற்றில் சிலவற்றை காணலாம்.

லைட்டர், குளிர்பானங்கள்:
* புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பலரும் லைட்டரை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பர். கார் வைத்து இருப்பவர்கள் காரின் டேஷ் போர்டில் அதை வைத்திருப்பதை காண முடிகிறது. ஆனால், காரில் ஒருபோதும் வைக்க கூடாத பொருட்களில் ஒன்று லைட்டர். கார் அதிக நேரம் வெயிலில் நின்றால் லைட்டரில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.

* அதேபோல, காரில் மது பாட்டில்கள், குளிர்பானங்கள் வைப்பதும் ஆபத்தானதுதானாம். குளிர்பானங்களில் கார்ப்பனேற்றம் செய்யப்பட்டு இருந்தால் இவை அதீத வெப்பத்தில் வெடிக்க கூடும். இதனால் உங்கள் காருக்குள் சில டேமேஜ்கள் ஏற்படலாம்.

லிப்ஸ்டிக், மேக்கப் பொருட்கள்:
* பெண்கள் பலரும் தங்களின் மேக்கப் கிட், லிப்ஸ்டிக் போன்ற சில மேக்கப் பொருட்களை காரில் வைக்கும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். வெயில் காலத்தில் இதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை அதிக வெப்பநிலையில் மேக் அப் கிட்கள் எரியக்கூடியவை. வெயிலில் உருகிவிடவும் கூடும். இதனால், காரில் மேக்கப் கிட்களை வைப்பதும் ரிஸ்க் ஆனதுதான்.

* சானிடைசர்கள் எனப்படும் கிருமி நாசினியை இப்போதும் எங்கு சென்றாலும் கையோடு கொண்டு செல்வதை காண முடிகிறது. குறிப்பாக கார்களில் இதை வைத்து இருக்கிறார்கள். சானிடைசர்களை பொருத்தவரை அதில் ஆல்ஹகால் கலந்து இருக்கும். அதிக வெப்பமான சூழலில் சானிடைசர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, காரில் வெயிலில் நிறுத்தினால் சானிடைசர்களை காரில் இருந்து எடுத்து செல்வது நல்லது.

சன்கிளாஸ்கள்:
* வெயில் காலத்தில் பலரும் சன்ஸ்கிளாஸ் அணிவது வழக்கம். கார் ஓட்டும்போது பலரும் அதை உபயோகிக்க மாட்டார்கள். அப்போது காரின் டேஷ்போர்டில் வைத்திருப்பார்கள். காரை வெயிலில் நிறுத்தும்போது கண்ணாடி வழியாக காருக்குள் புகும் வெப்பம் காரணமாக சன்கிளாஸ்கள் தீப்பிடித்து எரியும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் பிரேம் கொண்ட கண்ணாடிகளையும் இப்படி வைத்தால் சூரிய வெப்பத்தில் அவை உருகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

* வீட்டின் ரூமில் வைத்திருக்கும் போது எவ்வளவுதான் வெயிலின் தாக்கத்தால் எவ்வளவு ஹீட் இருந்தாலும் வரை பிளாஸ்டிக் பாட்டில்களின் வடிவம் மாறாது. ஆனால், காரில் அதிக நேரம் வைத்திருந்தால் பிளாஸ்டிக் பாட்டில்கள் எளிதில் உருகும். எனவே, வெயில் காலத்தில் வாட்டர் பாட்டில்க்ளை காரில் போட்டு செல்லக் கூடாது.

பாட்டில் தண்ணீர்:
* ஒருவேளை விட்டு விட்டு சென்றாலும் கூட நீண்ட நேரம் கார் வெயிலில் நின்றால்.. பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை மீண்டும் குடிக்கக் கூடாது. ஏனென்றால், பாட்டில் சூடாகி இருந்தால், பாட்டில் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து நச்சுப் பொருளாக மாறும். இது நமது உடல் நலனுக்கு கேடாக மாறும் அபாயம் உள்ளது.

கோடை வந்தாச்சு.. புதுசா ஏசி வாங்க போறீங்களா.. இந்த 5 விஷயத்தை தெரிஞ்சிக்காம போகாதீங்க


* கேமராக்கள், ஜி.பி.எஸ். தொடர்புடைய எலக்ட்ரானிக் பொருட்களை ஒரு போதும் காரில் விட்டுவிட்டு செல்ல வேண்டாம்.. அதிக வெப்பம் இந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மீது அதிக வெப்பம் விழும்போது கேமராவின் லென்ஸ்கள், மெமரி கார்டுகள் சேதமாக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று பேட்டரிகளை காரில் விட்டு செல்லக் கூடாது. பேட்டரியில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் ஆசிட் வெப்பத்தில் கசியக் கூடும். இதனால், கண் மற்றும் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.

மருந்து, மாத்திரைகள்:
* அதேபோல பெரும்பாலான மருத்துவ பொருட்களை அறை வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டியது அவசியம். காரை எங்காவது விட்டு செல்லும் போது நாம் மருந்து மாத்திரைகளையும் முடிந்தால் கையுடன் எடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால்.. அதிக வெப்பத்தில் மருந்துகளின் மூலக்கூறு அமைப்பு மாறும்.

* அதனை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் காரில் எடுத்து செல்வதற்கு ஏற்ப அதன் வெப்பநிலையை சீராக பராமரிக்கும் விதத்தில் பேக்கிங் செய்வது அவசியம். அல்லது, மருந்துகளின் வெப்பநிலையை பராமரிக்கும் சேமித்து வைக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+