விண்வெளியில் வேகமாக வளரும் தலைமுடி.. ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்த சுனிதா வில்லியம்ஸ்
சென்னை: விண்வெளி ஏராளமான சுவாரசியங்களை உள்ளடக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், உடனே பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியிருக்கிறார். இந்நிலையில், விண்வெளி குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள் தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது.
உண்மையில் நாம் நினைப்பதை விடவும், நம் கற்பனையை விடவும் விண்வெளி மிகப்பெரியது. புரியும்படி சொல்வதெனில், நமது சூரிய குடும்பத்தில் கடைசியாக உள்ள சிறிய கிரகம் புளுட்டோ. இப்போது சூரியனை சட்டை பட்டன் சைஸில் கற்பனை செய்து கொண்டால்.. இந்த சூரியன்(பட்டன்) இருக்கும் தொலைவிலிருந்து, புளுட்டோ சுமார் 38.4 கி.மீ தொலைவில் இருக்கும். கற்பனையிலேயே இவ்வளவு தூரம் எனில், நிஜத்தில் எவ்வளவு தூரம் இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

புளுட்டோவை தாண்டி இன்னும் நிறைய இருக்கு. அண்டங்கள், பேரண்டம் என போய்க்கொண்டு இருக்கிறது. இந்த விண்வெளியை ஆய்வு செய்ய கோடி, கோடியாக உலக நாடுகள் செலவு செய்து வருகின்றன. நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும் போது, ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்க வேண்டும்? என கேள்வி எழலாம். அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது.
விண்வெளியில் விண்கற்கள் அச்சுறுத்தல் எனில், இங்கிருந்து தப்பிக்கவும் இதே விண்வெளிதான் நமக்கு வழிகாட்டும். பூமி போன்று ஏதேனும் கிரகம் இருந்தால் அங்கு சென்று நம்மால் தங்கவும் முடியும். இப்படியான விஷயங்களுக்கு விண்வெளி ஆய்வு முக்கியம்" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விண்வெளி ஆய்வை பொறுத்தவரை, இந்தியாவிலிருந்து ராகேஷ் சர்மா முதன் முதலில் விண்வெளிக்கு சென்றார். அவரை தொடர்ந்து, இந்திய வம்சாவளிகளான கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்கு பறந்துள்ளனர். தற்போது வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
கடைசியாக கடந்த ஜூன் மாதம் அவர் விண்வெளிக்கு சென்றிருந்தார். 10 நாட்கள் பயணமாக இது திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மாதங்களை கடந்து அவர் விண்வெளியில் சிக்கியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் என்று நாசா கூறியுள்ளது.
இப்படி இருக்கையில், விண்வெளி குறித்து சுனிதா வில்லியம்ஸ் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள், தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது விண்வெளியில் இருக்கும் போது மனித உடல்களில் ஏற்படும் மாற்றம் குறித்து சுனிதாக கூறியுள்ளார்.
அதில், "விண்வெளியில் இருக்கும் போது மனித உடல் வளர்ச்சி அடையும். பூமியில் ஈர்ப்பு விசை இருக்கிறது. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால், மனித உடல் நீளும். நமது முதுகு தண்டு பூமியில் இருப்பதை விட, விண்வெளியில் இருக்கும் போது நீளும். எனவே விண்வெளியில் நீங்கள் உயரமாக இருப்பதாக உணர்வீர்கள்.
உடல் மட்டுமல்லாது, நகமும், தலைமுடியும் கூட வேகமாக வளரும். விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்கு வந்தவுடன். நமது உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்" என்று கூறியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். அப்போது மாணவிகளின் கேள்விக்கு பதிலளிக்கையில், மேற்குறிப்பிட்ட விஷயங்களை கூறியிருந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் விண்வெளியில் இருப்பதால் அவர் தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். விண்வெளியில் மனிதர்கள் அதிக நாட்கள் இருப்பதால் சில சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதில் முக்கியமானதுதான் எடை இழப்பு மற்றும் தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழக்கும் பிரச்னை.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும். எனவே தசைகள், எலும்புகளுக்கு எடையை தூக்கும் வேலை கிடையாது. தசைகள், எலும்புகளின் பயன்பாடு குறைவதால் நாளடைவில் தசை நார் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் தசை செயல்பாடு பலவீனமடையும். எலும்பு விஷயத்திலும் இதுதான் நடக்கும். எலும்பு பலவீனமடைந்து, அது உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இது தவிர கண்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது விண்வெளியில் இருப்பதால் மூளை மற்றும் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இது மங்கலான பார்வை, இரட்டை பார்வை மற்றும் கண் திரிபு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது சுனிதா வில்லியம்ஸும் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் பயணம்.. விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’ விண்கலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications