Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அடிதூள்".. திமுகவுக்கு சர்ப்ரைஸ் தந்த ஹைகோர்ட்.. எல்லாத்துக்கும் காரணம் நம்ம சேகர்பாபுதான்.. வாவ்!

சேகர்பாபு துறையான அறநிலையத்துறைக்கு ஐஹகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசுக்கு மேலும் நன்மதிப்பு கூடியுள்ளது.. தமிழக அறநிலையத்துறையை, சென்னை ஹைகோர்ட் மனம் திறந்து பாராட்டி உள்ளது.. இந்த பெருமையெல்லாம் அமைச்சர் சேகர்பாபுவுக்குதான் போய் சேர வேண்டும்.. காரணம், ஒரு தனிப்பட்ட துறையை நீதிமன்றம் பாராட்டுவது என்பது மகத்தானது.. வரவேற்கத்தக்கது.. போற்றத்தக்கது..!

சேகர்பாபு, அன்று அதிமுகவில் இருந்தபோதும் சரி, இன்று திமுகவில் இருந்த போதும் சரி, எந்த கட்சியில் இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று எப்போதுமே நிரந்தர மற்றும் தனி விசுவாசிகள் உண்டு...

அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் சேகர்பாபு.. ஒருகாலத்தில் அதிமுகவின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர்... பொது இடங்களில் ஜெயலலிதா இவரை பெயர் சொல்லியே கூப்பிட்டு பேசுவார்.. அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்..

அதிமுக

அதிமுக

அதனால்தான், திமுகவில் இவர் இணைந்தபிறகும்கூட, களப்பணி, கட்சி பணி என சுழன்று சிறப்பாக வேலை பார்க்க முடிந்தது.. தன் தொகுதியில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், டக்கென ஸ்டாலினுக்கே போனை போட்டு பேசி, அந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வருவார் சேகர்பாபாபு.. அதேசமயம், அதிகாரிகளை நாசூக்காக வேலை வாங்கும் திறமைசாலியும்கூட..

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டில் "கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.. இது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள, சேகர்பாபுதான் சரியான நபர் என்ற எண்ணத்தில்தானோ என்னவோ, அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் சரியாகவே ஒப்படைத்தார்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

அதற்கேற்றபடி, இந்த துறையின் பொறுப்பை ஏற்றதில் இருந்தே அதிரடியை கையில் எடுத்து வருகிறார் சேகர்பாபு.. அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று சேகர்பாபு முதல் உத்தரவை போட்டதுமே, எதிர்கட்சிகளுக்கு கலக்கம் சூழ்ந்துவிட்டது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், கோவையின் அந்த பிரம்மாண்டமான "ஆன்மீக பகுதி"யில் ஒரு லேசான நடுக்கம் வரவே செய்தது.. உடனடியாக ஒரு பாராட்டு ட்வீட்டும் பறந்து வந்தது.

வருவாய்

வருவாய்

இதற்கு பிறகு, நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்காக, கோயில் சொத்துகளை மீட்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தையும் இந்த துறை கையில் எடுத்தது.. தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராகலாம் போன்ற அடுத்தடுத்த அறிவிப்புகளை சேகர்பாபு வெளியிட்டார்.. இதெல்லாம் பார்த்து பாஜகவே வியந்துதான் போனது.. அவ்வளவு ஏன், அன்றைய பாஜக தலைவர் முருகனே இதனை வரவேற்றிருந்தார். ஆனால், எச்.ராஜா இப்போது வரை விமர்சித்து கொண்டுதானிருக்கிறார் என்பது வேற விஷயம்.

அறிவிப்புகள்

அறிவிப்புகள்


தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடத்தவிருப்பதாக சமீபத்தில்கூட சேகர்பாபு அறிவித்திருந்தார்.. 'எள்' என்று கூட சொல்ல தேவையில்லை. அதற்கு முன்பே எண்ணெயாக மாறக்கூடியவர் சேகர்பாபு" என்று முதல்வர் ஸ்டாலினும் இவரை ஒருமுறை பாராட்டியிருந்தார். இந்நிலையில், இந்து சமய அற நிலையத்துறை கோவில் நிலங்களிலிருந்து வர வேண்டிய 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கோயில்கள்

கோயில்கள்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கால், இடங்கள், கட்ட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என்பவர் வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்... அந்த வழக்கில் வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

 இன்று விசாரணை

இன்று விசாரணை

அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு அக்டோபர் வரை தமிழக அறநிலையத்துறை கோவில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி 2,390 கோடி ரூபாயை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பினர். அத்துடன், முறையாக வசூலித்திருந்தால் 100 கோவில்களை நன்றாக பராமரித்திருக்கலாமே என்றும் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அறநிலையத்துறைதரப்பில் காணொலி மூலம் ஆஜராகியிருந்த ஆணையர் பதிலளித்து பேசினார்.

 ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

அப்போது, "ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.. அனைத்து கோவில்களின் சொத்துக்களும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்களின் பட்டியலும், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.. அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்" என்றார். இதையெல்லாம் கேட்ட நீதிபதிகள், அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.. அத்துடன் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 சபாஷ் ஸ்டாலின்

சபாஷ் ஸ்டாலின்

பொதுவாக, தமிழக அரசின் மற்ற அமைச்சகத் துறைகளை காட்டிலும், அவ்வளவாக செயல்பாட்டில் இல்லாத துறையாக கருதப்பட்டதுதான் இந்து சமய அறநிலையத்துறை.. இதற்கு முன்பு இந்த துறை இந்த அளவுக்கு வீரியத்துடன் செயல்பட்டதா? இத்துறை சார்ந்த நலன்கள் மக்களுக்குபோதுமான அளவில் போய் சேர்ந்ததா? இந்த அளவுக்கு இதன் செயல்பாடுகள் பேசப்பட்டதா? என்று தெரியவில்லை.. ஆனால், தமிழக மக்களே வியந்து பார்க்கும் அளவுக்கு அதிரடிகளை காட்டி வருகிறார் அமைச்சர் சேகர்பாபு.. அந்த வகையில், ஹைகோர்ட் இன்று பாராட்டு தெரிவித்துள்ளது ஸ்டாலின் அரசுக்கு கிடைத்த மற்றொரு சபாஷ்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+