பயிர்க்கடன்.. கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்.. விவசாயிகளுக்கு நல்ல சேதி.. "அடங்கல்" இருக்கா?
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அது என்ன தெரியுமா?
பயிர்க்கடன்கள் என்பது ஒரு வகையான குறுகிய கால முன்பணமாகும்.. சாகுபடி செலவுகளை ஈடுகட்டுவதற்காக, அந்த பகுதிகளில் உள்ள முதன்மை கூட்டுறவு சங்கங்களால் முன்கூட்டியே வழங்கப்படும் பணமாகும்..

இதைக்கொண்டு தரமான விதைகள், உரங்கள், உரங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால், பயிர்கள் அறுவடை செய்யப்பட்டவுடன் இந்தக் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.. அரசு அளித்து வரும் இந்த கடனுதவி திட்டத்தினால் லட்சக்கணக்கானோர் பலன் பெற்று வருகிறார்கள்.
விவசாயிகள்: அந்தவகையில், கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன.. அவை, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் கடன்களையும் வழங்குகின்றன..
குறிப்பிட்ட காலத்தில் கடனை செலுத்தி விட்டால் வட்டி முழுதும் தள்ளுபடி கிடைக்கும்.. ஆனால், சில சங்கங்களில் கடன் வழங்கும் விதிமுறைகள் வேறுவேறாக உள்ளன.
விதிமுறைகள்: பயிர் கடன் வழங்குவதில் ஒருங்கிணைந்த மாதிரி ஒழுங்குமுறை விதிகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன.. அந்தவகையில், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் பயிர் கடன் வழங்க ஒரே மாதிரியான விதிமுறைகளை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ள விதிமுறைகள் இவைகள்தான்:
- தனிநபர் பிணையம் / தங்க நகை அடமானம் பேரில் அதிகபட்சம் 1.60 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீத வட்டியில் கடன் வழங்கலாம். அபராத வட்டி, 1 சதவீதம்.
- தங்க நகை அடமானம் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீத வட்டியில் வழங்கலாம்.
- சாகுபடி நில அடமானம் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை வழங்கலாம்.
- குத்தகை சாகுபடிக்கு தனிநபர் பிணையத்தின் வாயிலாக, 1.60 லட்சம் ரூபாய் வரையும், அடமானத்தின் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கலாம்.
- சர்க்கரை ஆலையில் இருந்து பெறப்படும் ஒப்பந்த சாகுபடிக்கு வழங்கப்படும் கடன்களில், 10 ஏக்கர் வரை கரும்பு சாகுபடிக்கு தனிநபர் பிணையத்தின் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
- கால்நடை பராமரிப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு நடைமுறை மூலதன கடன், தனிநபர் பிணையத்தில், 1.60 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். அதில், பயிர் கடனும் சேரும்.
- பயிர் கடன் பெறாமல், கால்நடை பராமரிப்புக்கு மட்டும் கடன் பெற்றால், அடமானத்தின் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
கடன் தரக்கூடாது: கடன் பெறும் உறுப்பினர் மற்றும் பிணையதாரர், சங்கத்தில் வேறு எந்த கடனும் பெற்று, தவணை தவறாதவராக இருக்க வேண்டும். விவசாய நகை கடனுக்கு ஈடாக வைக்கப்பட்ட நகைகளின் எடை, உண்மை தன்மை, தரம் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அடங்கல் சான்று இல்லாமல் பயிர் கடன் வழங்கக்கூடாது" என்று கூட்டுறவு துறை உத்தரவிட்டிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications