"5 தாமரைகள்".. எகிறி அடிக்கும் பாஜக.. பார்த்தீங்களா.. வானதிக்கு முகமெல்லாம் பூரிப்பு.. என்னாச்சு?
5 பெண்களுக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டுள்ளது என்று வானதி தெரிவித்துள்ளார்
சென்னை: ''பாஜகவில் ஐந்து பெண்களுக்கு, ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளதன் வாயிலாக, பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதை, பிரதமர் மோடி உறுதிப்படுத்தி இருக்கிறார் என்று, பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக போகின்றது.. இதற்கான தேர்தல் வரும் ஜுன் 10ம் தேதி நடக்க உள்ளது.
அந்தவகையில், மொத்தமுள்ள மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாஜகவுக்கு மொத்தம் 16 இடங்கள் கிடைக்க உள்ளதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 2 நாட்களுக்கு முன்பு பாஜக அறிவித்தது.

நிர்மலா சீதாராமன்
அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், அனில் பாண்டேவும் மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட உள்ளனர்.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் மறுபடியும் போட்டியிடுகிறார்... ஜக்கேஷ் என்பவரும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்ல உள்ளார். உபியை பொறுத்தவரை 6 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது.. மகாராஷ்டிராவில் 2 வேட்பாளர்களையும், பீகாரில் இருந்து 2 வேட்பாளர்களையும், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியானா மாநிலங்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.

5 தாமரைகள்
மொத்தமுள்ள வேட்பாளர்களில் 5 பேர் பெண்கள் ஆவர் என்பது ஸ்பெஷலான விஷயமாகும்.. அதாவது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசிய துணைத் தலைவர் தர்ஷனா சிங், தேசிய செயலர் சங்கீதா யாதவ், மத்தியப் பிரதேச மாநில பாஜக பொதுச்செயலர் கவிதா பட்டிதார், உத்தரகண்ட் மாநில பாஜக நிர்வாகி கல்பனா சைனி ஆகியோர்தான் அந்த 5 பெண்கள் ஆவார். ஆனால், காங்கிரசோ, தாங்கள் அறிவித்த 10 வேட்பாளர்களில், ரஞ்ஜீத் ரஞ்சன் என்ற சத்தீஷ்கர் பெண்ணுக்கு வாய்ப்பு தந்துள்ளது. இதைதான் பாஜக பெருமிதம் தெரிவித்து வருகிறது..

வானதி சீனிவாசன்
இது தொடர்பாக, பாஜகவின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை வெறும் பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் பிரதமர் மோடி நிரூபித்து கொண்டு இருக்கிறார்.. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதில், எப்போதும் உறுதியாக இருக்கும் மோடி, இந்த முறை ராஜ்யசபாவுக்கு அறிவிக்கப்பட்ட 16 பேரில், ஐந்து பெண்களுக்கு இடமளித்துள்ளார்.

பூரிப்பு - மகிழ்ச்சி
அதில் 2 பேர், மகளிரணி தேசிய நிர்வாகிகள் ஆவர்.. அதுமட்டுமல்ல, "உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதபோதும், தேர்தலில் பணியாற்றிய பெண்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே விடுத்திருந்தேன்.. அந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி... இதற்காக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு என்னுடைய நன்றிகள் என்றார் வானதி..!
-
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான்












Click it and Unblock the Notifications