விவசாயிகளுக்கு ஹேப்பி.. மின்சாரத்திற்கு தனி வழித்தடங்கள்.. இனிமேல் கரண்ட் போகாது.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: விவசாயிகளின் நன்மைக்காக தமிழக மின்சார வாரியம் பல்வேறு நன்மைகளை செய்து தந்து வருகிறது.. ஏற்கனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும்நிலையல், அடுத்த புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது தமிழக மின்வாரியம். இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசானது, நம்முடைய விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே, 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த இலவச மின்சாரத்திற்கு வேளாண் துறை சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனாலும், ஒருசிலர் இந்த இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயம்: குறிப்பாக, விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்டதைவிட,அதிகமாக மின்சாரம் உபயோகப்படுத்துகிறார்கள்.. இலவச விவசாய மின் இணைப்பு என்ற பெயரில், வர்த்தகம், தொழிற்சாலை போன்றவற்றிற்கும் சட்டவிரோதமாகவும் இந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து பல நுாறு ஏக்கர் நிலங்களை வாங்கி, இந்த இலவச மின்சாரத்தை, தங்கள் நிலங்களில் பயன்படுத்தி கொள்கின்றன.
அதாவது, விவசாயிகள் தவிர, மீன், இறால் பண்ணைகள், கிடங்குகள், சிறுதொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விதியை மீறி பயன்படுத்துவதாகவும் நாளுக்கு நாள் புகார்கள் எழுந்தது. அதனால்தான், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமலிருக்கும் இணைப்புகளையும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளையும் கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு: இதற்கு காரணம், அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை உண்மையிலேயே விவசாய பணிகளுக்குதான் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விவசாயிகள் பெயரை சொல்லி, வேறு உபயோகத்திற்கு பிறர் பயன்படுத்துகிறார்களா? என்ற ஆய்விலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய மின்சாரம்: விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படாத நேரத்திலும், சிலர் பயன்படுத்துவதால், அந்த வழித்தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. மத்திய அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயத்திற்கு, தனி வழித்தடங்களில் மின்சாரம் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 6,200 கிராம மின்வழித்தடங்களில் விவசாய இணைப்புகள் உள்ளன.. இதில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக விவசாய இணைப்புகள் உள்ள, கிட்டத்தட்ட 1,685 வழித்தடங்களை மட்டும் விவசாயத்திற்கான தனி வழித்தடமாக அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
நன்மைகள்: இந்த பணிகளால், இனிமேல் மின்னழுத்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்காது.. மின் இழப்பு குறையும் என்பதால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பும் தடுக்கப்படும்... எல்லாவற்றிற்கும் மேலாக, பகலில் சூரியசக்தி மின்சாரமும் அதிகம் கிடைக்கிறது. எனவே, சூரியசக்தி மின்சாரத்தை, விவசாய வழித்தடங்களுக்கு வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications