3 மேட்டர்கள்.. கண்ணசைத்த ஸ்டாலின்.. திக்குமுக்காடிய விஜயகாந்த்.. காரணம் தெரியுமா?.. "சபாஷ் நண்பர்"
விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைத்து, அறிவுரை வழங்கிய முதல்வரை தேமுதிக வரவேற்கிறது என அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளது.. இதனால் சில காலமாகவே வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.. ஆனாலும், தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டும், மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் பங்கெடுத்தும் வருகிறார்...
அதேசமயம், தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தேவையான வழிமறைகள் குறித்தும், தன்னுடைய கருத்துகளையும் அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறார்...

விஜயகாந்த்
விஜயகாந்த் ட்வீட் போட்டாலும் சரி, அறிக்கை வெளியிட்டாலும் சரி, அதற்கு தனி வரவேற்பு மக்களிடம் இருந்து வருகிறது.... அந்த வகையில், சமீபத்தில் தேமுதிக சார்பில் 3 மூன்று முக்கிய கோரிக்கைகள் விடப்பட்டிருந்தன.. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அதுகுறித்த செயல்பாட்டு வடிவத்தை தமிழக அரசும் தொடங்கிவிட்டது.. இதற்குதான் விஜயகாந்த் நெகிழ்ந்து போயுள்ளார்..

அறிக்கை விட்ட விஜயகாந்த்
உடனடியாக ஒரு அறிக்கையும் வெளியிட்டு, தன்னுடைய நண்பரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை பாராட்டி, வரவேற்பும் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் அறிக்கையில் உள்ளது இதுதான்: "உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விஜயகாந்த் வரவேற்பு
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது.

விஜயகாந்த் நெகிழ்ச்சி
அதேபோல் தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவிக்கும் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, இதுவே சரியான தருணம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்த மறுநாளே, கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவையில் அறிவித்ததை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது.

விஜயகாந்த் பாராட்டு
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, எனது ஆணைக்கிணங்க, விருதுநகரில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் எதிரொலியாக குற்றவாளிகளில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் நன்றி
சமீபத்தில்தான், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, விசிக முன்வைத்த 3 கோரிக்கைளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. ஒரே நாளில் தங்களின் 3 கோர்க்கைகளையும் முதல்வர் ஏற்று நடவடிக்கை எடுத்ததில் திருமாவளவன் திக்குமுக்காடி போய்விட்டார்.. அன்றைய தினமே தன்னுடைய ஏமஎம்எல்ஏக்களை அழைத்து கொண்டு நேரடியாகவே முதல்வரை சென்று பார்த்து பாராட்டும், நன்றியையும் தெரிவித்தார்..

விஜயகாந்த் நெகிழ்ச்சி
கூட்டணியில் இருக்கும் விசிகவுக்காக மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தேமுதிக விடுத்த கோரிக்கையையும் முதல்வர் கவனம் செலுத்தி வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.. அந்த வகையில், தன்னுடைய முதல்வர் ஸ்டாலினின் மனம்கவர்ந்த நண்பர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications