Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைக்கிளில் வந்த "பாஜக" தூதுவன்.. இதை பண்ணாலே திமுக காலி.. 3 இடி மத்தளத்துக்கு.. சுத்தவிட்ட எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணி முடிவாகாத நிலையில், எந்த பக்கம் போவது என்று தெரியாமல் முக்கிய கட்சி தலைவர்கள் திண்டாடி கொண்டிருக்கிறார்களாம். இதுகுறித்த ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததை, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கவேயில்லை.. எப்படியாவது 2 கட்சிகளும் ஒன்றிணைந்துவிடுவார்கள் என்றே கருதினார்கள்.. ஒருகட்டத்தில் 2 தரப்பையும் சமாதானப்படுத்தவும் முயன்றார்கள்.

Super Decision will take by TMC GK Vasan and Can Edappadi Palanisamy alliance with BJP, what happened actually

ஆனாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை யாராலுமே தகர்க்க முடியவில்லை.. அதனால்தான், நிலைமை 2 மாதத்தில் சரியாகிவிடும் என்று நினைத்து, கூட்டணி பற்றி ஜனவரியில் முடிவு செய்வோம் என்று அறிவித்திருந்தார் ஜிகே வாசன்.. ஜனவரி முடிந்து பிப்ரவரியே ஆரம்பித்துவிட்டது. ஆனால், "பாஜகவுடன் கூட்டணி கதம், கதம்" என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து வருகிறார்.

வாசன்: இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த ஜி.கே.வாசன், பாஜக உறவை அதிமுக முறித்துக்கொண்டதில் எந்த பக்கம் செல்வது என கடந்த சில மாதங்களாக திண்டாடி வருகிறார்.. இதற்கு 2 விதமான காரணங்கள் உள்ளன.

"அதிமுகதான் உங்களுக்கு ராஜ்யசபா சீட் தந்தது, அதில் தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள். அதனால், அதிமுக கூட்டணிக்கு நாம் செல்வதுதான் சரியாக இருக்கும்" என்று த.மா.கா. நிர்வாகிகளில் பலர் வாசனை வலியுறுத்துகின்றனராம்..

பாஜக அழுத்த: ஆனால், முக்கிய நிர்வாகிகளோ, "பாஜகவின் அழுத்தம் இல்லை என்றால் ராஜ்யசபா சீட்டை நமக்கு எடப்பாடி பழனிச்சாமி தந்திருக்க மாட்டார். அதனால் அந்த நன்றி கடனுக்காக பாஜக கூட்டணிக்கு செல்வதுதான் சரியாக இருக்கும்.

மீண்டும் மோடிதான் ஆட்சி அமைக்கப் போகிறார். நிச்சயம் இந்த முறை உங்களை கேபினெட்டில் மோடி சேர்த்துக் கொள்வார். அதனால் பாஜக கூட்டணி என்கிற முடிவை எடுங்கள்" என்று அழுத்தமாக காரண காரியங்களோடு சொல்லி வருகின்றனராம். அதுக்காகத்தான், கூட்டணி குறித்து முடிவுஎடுக்க த.மா.கா.வின் பொதுக்குழுவை 12-ந்தேதி கூட்டியுள்ளார் வாசன். இதற்கிடையே, அண்மையில் எடப்பாடியை சந்தித்து நடப்பு அரசியல் குறித்து நிறையப் பேசியிருக்கிறார் வாசன்.

பாஜக ஆட்சி: குறிப்பாக, அந்த சந்திப்பில், "திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அதிமுக-பாஜக கூட்டணி முறியக் கூடாது என நான் விரும்புகிறேன். பாஜக தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. நேற்று டெல்லியில் இருந்து என்னிடம் பேசினார்கள். இதனையடுத்துதான் உங்களை சந்திக்க வந்துள்ளேன். திமுகவை தோற்கடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா ? எம்.பி. தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தானே திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என சொல்ல முடியும்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு சாதகமான அரசியல் களமும் உருவாகும் . இந்த சூழல் உருவாக வேண்டுமானால், தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் ஒன்றாக கூட்டணியில் இருக்க வேண்டும். திமுக பலமாக ஒரு கூட்டணியை கட்டமைத்து போட்டியிடும் போது, எதிர்க்கட்சிகள் நாம் எல்லாம் தனித்தனியாக நின்றால் அது திமுகவுக்குத்தானே சாதகம். இது உங்களுக்கே நல்லா தெரியும். திமுக மீதான அதிருப்தி வாக்குகள் பிரிவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா ?

அதிமுக விவகாரம்: 40-க்கு 40-ம் திமுக கூட்டணி ஜெயித்து விட்டால் அதிமுக எப்படி அரசியல் செய்ய முடியும் ? ஏற்கனவே, ஓபிஎஸ், தினகரன் விவகாரத்தில் சில சரிவுகள் இருக்கிறது. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் மீண்டும் திமுக வலிமையாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?" என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் விவரித்து பேசியிருக்கிறார் வாசன்.

அவர் பேசுவதை குறுக்கீடு செய்யாமல் அனைத்தையும் முழுமையாக கேட்டுக்கொண்ட எடப்பாடி, "பாஜகவுடன் கூட்டணி இல்லைன்னு தீர்க்கமாக முடிவெடுத்து அறிவித்து விட்டோம். பாஜக இல்லாத ஒரு அலையன்சை உருவாக்குவதன் மூலம் திமுகவை அசைத்துப் பார்க்க முடியும்ங்கிறது எனது நம்பிக்கை. அதிமுகவின் சீனியர்களும் அதைத் தான் சொல்கிறார்கள். அதனால்தான், உறவையே முறித்தோம்.

அழுத்தமான முடிவு: இனி கூட்டணி இல்லைன்னு அழுத்தமாக சொல்லிவிட்டப்பிறகு கூட்டணி வைத்துக் கொண்டால் என் தலைமைக்கு மரியாதை இருக்காது வாசன். எடுத்த முடிவை வாபஸ் பெற்றால், தொண்டர்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி என் தலைமை மீது நம்பிக்கை போய்விடும். அதனால், இந்த தேர்தலில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

எங்களின் பலம் எங்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிந்தால் போதும். தேர்தலில் தோல்வி வந்தால் எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சொன்ன சொல்லில், எடுத்த முடிவில் நான் உறுதியாக இருந்தேன் என்ற நல்ல இமேஜ் கிடைக்கும் தானே? அது போதும்.. அந்த இமேஜ் சட்டமன்றத்தில் எங்களுக்கு கைக் கொடுக்கும்" என்று சொல்லி வாசனை அனுப்பி வைத்துவிட்டாராம் எடப்பாடி.

குழப்பம்: வாசன் நேரில் வந்து சந்தித்து பேசியதை பற்றி எடப்பாடியிடம், அதிமுக சீனியர்கள் விசாரித்திருக்கிறார்கள். சந்திப்பில் நடந்ததை விவரித்த எடப்பாடி, டெல்லி ஆட்கள் சொல்லித்தான் என்னை சந்திக்க வந்தார் வாசன். டெல்லி நினைப்பதை அவரது வாய்சில் சொன்னார். ஏற்க மறுத்து விட்டேன்" என்றாராம் எடப்பாடி பழனிசாமி.. உடனே அதைக்கேட்ட சீனியர்களில் ஒருவர், "நாம் தான் கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டோமே, அப்பறம் மீண்டும் மீண்டும் ஏன் நம்மை இப்படி நெருக்குகிறார்கள்?' என்று கேட்டாராம்.

ஆக, வாசனின் கடைசி முயற்சியும் தோல்வியை சந்தித்துவிட்ட நிலையில், "சைக்கிள்" டெல்லி போகுமா? அல்லது ராயப்பேட்டை பக்கம் போகுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+