ஆன்லைனில் பட்டா சரிபார்ப்பு.. கட்டிட அனுமதிக்காக இனி அலைய தேவையில்லை.. தமிழக அரசின் சூப்பர் வசதி
சென்னை: கட்டுமான பணியில், பொதுமக்களின் நன்மைக்காக இன்னொரு வசதி கொண்டுவரப்படுகிறது.. பட்டா உள்ளிட்டவற்றை சரிபார்க்க ஆன்லைனிலேயே இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே தற்போது ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்.. இதனால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நேரம் மிச்சமாகிறது.

ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. இதனால், பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை..
திருமணம்: அதேபோல, திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் "நம்பிக்கை இணையம்" என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது.
ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இதற்கெல்லாம் கடிவாளம் போடவே, பத்திரப்பதிவு துறையில், இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கட்டுமான துறையிலும், புதுபுது வசதிகள் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இப்போதுகூட, ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுமான பணிகள்: அதாவது, கட்டுமான திட்ட அனுமதி பணிகளை ஒற்றை சாளர முறைக்கு மாற்றுவதற்காக, ஒருங்கிணைந்த புதிய இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளத்தில் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இருந்தாலும், கட்டிட அனுமதி கேட்டு, தாக்கலாகும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, கூடுதலாக புதிய வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக, பட்டா, நில வரைபடம், கிராம வரைபடங்களை ஆய்வு செய்வற்காகவே, ஒற்றை சாளர முறைக்கான சாப்ட்வேரில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை உறுதி செய்ய, அலைய வேண்டிய தேவை இருக்காது..
விரைவில் அறிவிப்பு: அதுமட்டுமல்ல, முதல் நிலை அலுவலரே இந்த ஆவணங்களை சரி பார்த்துவிட முடியும் என்பதால், விண்ணப்பதாரர்களுக்கு நேரமும் மிச்சமாகும் என்கிறார்கள். விரைவில் இந்த வசதி, பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications